Advertisment

14 முறை நேருக்கு நேர் மோதிய அஜித் - விஜய் படங்கள் : யாருக்கு எத்தனை வெற்றி?

சமீப காலமாக விஜய் அஜித் படங்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியாகி வருகிறது. ஆனாலும் அவ்வப்போது இவர்களின் படங்கள் ஒன்றாக வெளியாவதும் வழக்கமாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Ajith Movies

Vijay Ajith Movies

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகர்களின் பட்டியலில் விஜய் அஜித் ஆகிய இருவருக்கும் தனி இடம் உண்டு. இவர்களின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடுவது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. அதே சமயம் இவர்கள் இருவரின் படங்களும் ஒன்றாக வெளியாகும் நாள் இணையத்தில் மட்டுமல்ல நேரடியாகவும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படும்.

Advertisment

சமீப காலமாக விஜய் அஜித் படங்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியாகி வருகிறது. ஆனாலும் அவ்வப்போது இவர்களின் படங்கள் ஒன்றாக வெளியாவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இதுவரை விஜய் அஜித் படங்கள் ஒன்றாக வெளியானது எந்தெந்த படங்கள் யாருக்கு வெற்றி என்பதை பார்ப்போம்.

கோயம்புத்தூர் மாப்பிள்ளை – வான்மதி

1996 –ம் ஆண்டு விஜய் நடிப்பில் கோயம்புத்தூர் மாப்பிப்ளை அஜித் நடிப்பில் வான்மதி ஆகிய 2 படங்களும் ஒன்றாக வெளியானது. இதில் வான்மதி படம் ஏ சென்டர்களில் வெற்றி பெற்றது. அதேபோல் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படம் கிராமபுறங்களில் வெற்றியை கொடுத்தது.

பூவே உனக்காக – கல்லூரி வாசல்

1996-ம் ஆண்டு வெளியான விஜயின் பூவே உனக்காக திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து விஜயின் சினிமா வாழ்க்கையை புரட்டிபோட்டது. அதே சமயம் அஜித் பிரஷாந்த் நடிப்பில் வெளியான கல்லூரி வாசல் படம் ஒரு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது.

காதலுக்கு மரியாதை – ரெட்டை ஜடை வயசு

1997-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயின் காதலுக்கு மரியாதை திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதே சமயம் அஜித்தின் ரெட்டை ஜடை வயசு திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்தது.

காலமெல்லாம் காத்திருப்பேன் – நேசம்

1997-ம் ஆண்டு வெளியான இந்த 2 படங்களுமே சுமாரான வெற்றிதான் என்றாலும் கூட அஜித்தின் நேசம் படம் காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தை விட வெற்றி பெற்றது.

நிலாவே வா – உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

1998-ல் வெளியான இந்த 2 படங்களில் நிலாவே வா படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் அஜித் கெஸ்ட் ரோலில் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

துள்ளாத மனமும் துள்ளும் – உன்னைத்தேடி

199-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் படம் பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் அஜித்தின் உன்னைத் தேடி திரைப்படம் ஒரு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது.

குஷி – உன்னை கொடு என்னை தருவேன்

2000-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயின் குஷி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதே சமயம் அஜித்தின் என்னை கொடு என்னை தருவேன் திரைப்படம் ஒரு சுமாரான வெற்றியை கொடுத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது.

ப்ரண்ஸ் – தீனா

2001-ம் ஆண்டு வெளியான இந்த 2 படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்தது.

பகவதி – வில்லன்

2002-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் அஜித்தின் வில்லன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், விஜய் நடித்த பகவதி திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

திருமலை – ஆஞ்சநேயா

2003-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயின் திருமலை படம் கமர்ஷியலாக வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அஜித்தின் ஆஞ்சநேயா திரைப்படம் ஒரு சுமாரான படமாக அமைந்தது.

ஆதி – பரமசிவன்

2006-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயின் ஆதி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதே சமயம் அஜித்தி்ன் பரமசிவன் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

போக்கிரி – ஆழ்வார்

2007-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயின் போக்கிரி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அஜித்தின் ஆழ்வார் எதிபார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

ஜில்லா – வீரம்

2014-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயின் ஜில்லா திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், அஜித்தின் வீரம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

வாரிசு – துணிவு

2023-ம் ஆண்டு வெளியான இந்த 2 படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay Actor Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment