தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது தனது 28-வது படமாக ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று மகேஷ் பாபுவின் தந்தையும் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான கிருஷ்ணா மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏற்னவே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் மகேஷ் பாவுவின் அண்ணன், கடந்த செப்டம்பர் மாதம் அவரின் தாயார் ஆகியோர் இறந்த நிலையில், தற்போது அவரது அப்பாவும் இறந்துள்ளார்.
இதனால் ஒரே வருடத்தில் அப்பா அம்மா அண்ணன் என குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை பறிகொடுத்துள்ளார் மகேஷ்பாபு
Advertisment
Advertisement
வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் கூட்டம்
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வம் விஜய் இறுதிக்கட்ட படப்பிடிப்பில்பங்கேற்று வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள வாரிசு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் கசிந்தது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் கூடியிருந்த ரசிகர்கள் விஜயை பார்க்க அவரது கேரவனுக்கு அருகில் சென்றுள்ளனர். அப்போது விஜய் அவர்களை பார்த்து கையசைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு சிக்கல்
தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவிலும் வெளியாகி வருகிறது. ஆனால் தற்போது பொங்கல் பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து தியேட்டகர்கள் ஒதுக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் விஜய் வாரிசு, மற்றும் அஜித்தின் துணிவு படத்திற்கு தியேட்டர்கள் அதிகம் கிடைப்பத்தில் சிக்கல் எழுந்துள்ளது.
ஐசரி கனேஷ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி
வேல்ஸ் பிலிம்ஸ் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வரும் ஐசரி கனேசன் தற்போது இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். குழந்தைகள் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி வரும் இந்த படத்தில் ஆதி விளையாட்டு ஆசிரியர் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் முன்னோட்டம் தற்போது வைரலாகி வருகிறது.
பிரின்ஸ் ஓடிடி வெளியீடு எப்போது?
தீபாவளி தினத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21-ந் தேதி வெளியான படம் பிரின்ஸ். காதலை மையப்படுத்தி வெளியான இப்படத்தில் சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற பிரின்ஸ் படம் வரும் நவம்பர் 25-ந் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil