Advertisment

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்னு விஜய்க்கு ஆசை இருக்கு; இது ரசிகர்களுக்கு தெரியுமா?

தொடக்கத்தில் ஒரு பெரிய வெற்றிக்காக ஏங்கிய விஜய்க்கு சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்னு விஜய்க்கு ஆசை இருக்கு; இது ரசிகர்களுக்கு தெரியுமா?

முன்னணி நடிகரான விஜய் விரைவில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் விஜய் என்று பெயர் வரும் என்று சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

முன்னணி இயக்குனராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய், பல தடைகளை உடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கட்டியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். மேலும் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா கேரளா என அண்டை மாநிலங்களிலும் ரசிகர்கனளை குவித்து வைத்துள்ளார்.

தொடக்கத்தில் ஒரு பெரிய வெற்றிக்காக ஏங்கிய விஜய்க்கு சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. விமர்சன ரீதியாக சில படங்கள் சறுக்கினாலும் வசூல் ரீதியாக அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என்று சொல்லாம். அந்த வகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியானதை தொடர்ந்து வரும் ஜனவரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியாக உள்ளது.

முதல் முறையாக விஜய் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துள்ள வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் அடுத்து நடிக்க உள்ள தளபதி 67 படமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகளுடன் விஜய் உரையாடிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பதிவில், மாணவிகள் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்து வருகிறார். அப்போது ஒரு மாணவி உங்களது அப்பா ஒரு இயக்குனர் உங்களுக்கும் இயக்குனராகுமு் ஆசை இருக்கிறதா என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் விஜய் எனக்கும் ஆசை இருக்கிறது. ஒருநாள் கதை திரைக்கதை, வசனம், இயக்கம் விஜய் என்று வரும் பாருங்கள் அப்படி ஒரு ஆசை இருக்கிறது பார்ப்போம் என்று கூறியுள்ளார்.   

இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் அவர் எப்போது இயக்குனராக போகிறார் என்று கேட்டு வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamil Cinema Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment