Advertisment

மகனை ஹீரோவாக களமிறக்கும் விஜய் சேதுபதி... இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி.

author-image
WebDesk
New Update
Vijay Sethupathi Surya

விஜய் சேதுபதி - சூர்யா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி தமிழ் தெலுங்கு தாண்டி தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் நிலையில், அவரது மகன் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து தர்மதுரை, சூப்பர் டீலக்ஸ், சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய் சீதகாதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நாயகனாக மட்டுமல்லாமல், பேட்ட, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி தான் நடித்த சிந்துபாத் படத்தில் தனது மகன் சூர்யாவை ஒரு கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார். இந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் விஜய் சேதுபதி மகன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தற்போது  ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிகராக அறிமுகமாகிறார்.

ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக அறியப்பட்ட அனல் அரசு, 'சிங்கக்குட்டி' மற்றும் 'ராஜபாட்டை' படங்களில் சில கர்சிகளில் நடித்துள்ளார். தற்போது விஜய்சேதுபதி மகனை வைத்து தான் இயக்கும் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் என்ற படத்தில் சிறிய காட்சியில் தோன்றிய சூர்யா, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனது தந்தை விஜய் சேதுபதியுடன் 'விடுதலை பார்ட் 2' படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி கடைசியாக 'மும்பைகார்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படம் வெளியான நிலையில், அடுத்து இந்தியில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து அவர் நடித்த ‘ஜவான்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதி ஆறுமுககுமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'விஜேஎஸ் 51' என்று தலைகப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு ஏற்கனவே மலேசியாவில் முடிவடைந்தது.

இது தவிர மெர்ரி கிறிஸ்துமஸ்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' மற்றும் 'காந்தி டாக்ஸ்' என விஜய் சேதுபதியின் சில படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன:

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment