/indian-express-tamil/media/media_files/2025/10/15/vishal-magudam-2025-10-15-15-03-03.jpg)
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகர் விஷால் தற்போது மகுடம் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்பாட்டில் விஷால் தானே இயக்குனராக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷால் செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு சண்டைக்கோழி, திமிரு, என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தாமிரபரணி, சத்யம் என வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வந்தார். லவ், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் வெளியான இவரது படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது .
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ரத்னம் படம் கடுமையாக விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், படமாக்கி 12 ஆண்டுகள் கழித்து, கடந்த பொங்கல் தினத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் விஷால் மீண்டும், அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய நிலையில், சமீபத்தில் மகுடம் என்ற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் ப்ரமோகூட வெளியானது. படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதர்வா நடிப்பில் ஈட்டி என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அரசு இந்த படத்தை இயக்கி வந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் ரவி அரசுக்கும் விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஷாலே படத்தை இயக்கியதாக தகவல்கள் வெளியானது. அதன்பிறகு இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டு ரவி அரசு படத்தில் இருந்து விலகியதாகவும், விஷாலே இயக்குனர் பணியை செய்து வருவதாகவும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
🎬 Actor Vishal turns Director for #Magudam!
— Ramesh Bala (@rameshlaus) October 15, 2025
After creative differences with director Ravi Arasu, Vishal has taken charge of directing the film himself — ensuring the project moves forward smoothly under his own vision. 💪🔥pic.twitter.com/Z6WkZFf0Js@VishalKOfficial#Vishal…
சினிமா ட்ராக்கர் ரமேஷ் பாலா வெளியிட்டுள்ள வீடியோவில், விஷால் இயக்குனராக காட்சி அமைப்புகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் இந்த பதிவில், நடிகர் விஷால் 'மகுடம்' படத்துக்கு இயக்குநராகிறார். இயக்குநர் ரவி அரசுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, நடிகர் விஷால் அவர்கள் மகுடம் திரைப்படத்தை தானே இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம், தனது சொந்தப் பார்வையுடன் திட்டப்பணி தடையின்றி, சீராக முன்னேறுவதை அவர் உறுதி செய்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.