/indian-express-tamil/media/media_files/2025/10/30/sivaji-rajinikanth-2025-10-30-19-49-40.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தனது குழந்தையாக நடித்த மீனாவுடனே சில படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல் அம்மா மற்றும் அவரது மகள் இருவருடனும் ஜோடியாகவும் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான ரஜினிகாந்த், அதன்பிறகு, தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். இவரை விட வயதில் சிறியவர் என்றாலும், இவருக்கு முன்பே திரையுலகில் கால் பதித்தவர் தான் நடிகை லட்சுமி. 1968-ம் ஆண்டு வெளியான ஜீவனாம்சம் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர்.
அதன்பிறகு கன்னிப்பெண், காவல் தெய்வம் என பல படங்களில் நடித்திருந்த லட்சுமி, எம்.ஜி.ஆர் சிவாஜி, ஜெய்சங்கர் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். 1980-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார், இந்த படத்தில, ரஜினிகாந்தின் முதல் மனைவியாக ஸ்ரீபிரியா நடித்திருந்தாலும், லட்சுமிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
அதன்பிறகு 1981-ம் ஆண்டு வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாகவும், அவரது அம்மாவாகவும் நடித்திருந்த லட்சுமி, அவரின் 100-வது படமான ராகவேந்திரா, கடைசியாக 1999-ம் ஆண்டு வெளியான படையப்பா படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாகவும், சிவாஜிக்கு மனைவியாகவும் நடித்திருந்தார். அதன்பிறகு, லட்சுமி பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும் ரஜினியுடன் இணைந்து நடிக்கவில்லை.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/29/rukmani-and-lakshmi-2025-10-29-08-14-34.jpg)
அதேபோல், 1990-ம் ஆண்டு வெளியான நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தில் தனது அம்மா லட்சுமியின் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா பாஸ்கரன். அதன்பிறகு மில் தொழிலாளி, தையல்காரன், பாக்யராஜூவுடன் ராசுகுட்டி, விக்ரமுடன் மீரா ஆகிய படங்களில் நடித்திருந்த ஐஸ்வர்யா, 1993-ம் ஆண்டு எஜமான் என்ற படத்தில் ரஜனிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக மீனா நடித்திருந்தாலும், அவர் இறந்தவுடன், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொள்ள முயற்சிகள் நடப்பது தான் திரைக்கதை.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/08/rajinikanth-aishwarya-2025-10-08-17-12-18.jpg)
ரஜினிகாந்த் – லட்சுமி முதன் முதலில் இணைந்து நடித்த பொல்லாதவன் படத்திலும் ஸ்ரீபிரியா இறந்துவிட, லட்சுமி ரஜினியுடன் ஜோடி சேர்ந்துவிடுவார். அதேபோல் எஜமான் படத்திலும், மீனா இறந்துவிட, ஐஸ்வர்யா ரஜினியுடன் இணைந்துவிடுவார். அம்மா மகள் இருவருக்கும், ரஜினியுடனான முதல் படம் ஒரே மாதிரியான திரைக்கதையில் அமைந்துள்ளது. லட்சுமியின் அம்மாவும் பழம்பெரும் நடிகை தான். அவர் சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். அதேபோல் லட்சுமியும் அவர்கள் இருவருடனும் நடித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us