தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரன் நடிக்கும் படம், தமிழில் இந்தியன் 2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இவரது இளைய மகள் அதிதி ஷங்கர்.

முத்தையா கார்த்தி இணைந்துள்ள விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமான அதிதி ஷங்கர் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர்.

பிரகாஷ் ராஜ், சரண்யா, ராஜ்கிரன், சூரி, கருணாஸ், ஆர்.கே சுரேஷ், மனேஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்த விருமன் படம், கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் அறிமுகமானது மட்டுமல்லாமல் படத்தில் வரும் மதுரை வீரன் என்ற பாடலை பாடி பாடகியாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அதிதி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக மாறியுள்ளார்.


விருமன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து வரும் அதிதி அடுத்தடுத்து படங்களில் நடிக்க பல இயக்குனர்கள் அவரை அனுகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.

அதே சமயம் விருமன் படம் வெளியான பிறகு அதிதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஃபாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர். அதேபோல் அவர் வெளியிடும் பதிவுகளுக்கும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பச்சை நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/