Advertisment

லவ்லி பிரின்ஸஸ் பூங்குழலி... ஐஸ்வர்யா லட்சுமி பிளாக் அண்ட் வொயிட் க்ளிக்ஸ்

தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aishwarya Lakshmi

பொன்னியின் செல்வன் பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி

தனுஷுன் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்ய லட்சுமி சமீபத்தில் வெளியிட்டுள்ள பிளாக் அன்ட் வொயிட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

மருத்துவம் படித்துவிட்டு சினிமாவில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மலையாளத்தில் அறிமுகமான இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார்.

publive-image

தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.

publive-image

தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்த இவர், புத்தம்புது காலை விடியாதா என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவாகவும் இருந்துள்ளார்.

publive-image

அதன்பிறகு ஆர்யா நடிப்பில் கேப்டன் என்ற படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி,வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் படகோட்டும் பெண் பூங்குழலி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்று வருகிறார்.

publive-image

தற்போது தமிழ் தெலுங்கு மலையாள படங்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

publive-image

இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment