இவ்ளோ அழகா இருக்க, ஆனா மேக்கப் சரி இல்லையே; குறை சொன்ன ராதிகா: நடிகை அமலா ஓபன் டாக்!

விஜயகாந்த், ரஜினி, கமல், பிரபு என பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்த அமலா, 1992-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்துகொணடார்.

விஜயகாந்த், ரஜினி, கமல், பிரபு என பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்த அமலா, 1992-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்துகொணடார்.

author-image
D. Elayaraja
New Update
tamil cinerma Actress amala

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி கமல் இருவருடனும் தலா 3 படங்கள் நடித்துள்ள நடிகை அமலா, திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்ட நிலையில், தற்போது தனது சினிமா நினைவுகள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் அமலா. அதேபோல் குறுகிய காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள அமலா, கடைசியாக கடந்த 1991-ம் ஆண்டு கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்தருந்தார், 1986-ம் ஆண்டு மைதிலி  என்னை காதலி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அமலா, 5 வருடங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் நடித்தார்.

விஜயகாந்த், ரஜினி, கமல், பிரபு என பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்த அமலா, 1992-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்துகொணடார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அமலா, லைஃப் ஈஸ் பியூட்டிக்புல் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அமலா, அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது நினைவுகள் குறித்து பகிர்ந்துகொண்டார்.

அதில் பேசிய அவர், நான் நடிக்கும்போது என் கேரக்டர் பற்றி மட்டும் தான் சொல்வார்கள். படத்தின் முழு கதையும் எனக்கு தெரியாது. தியேட்டரில் பார்க்கும்போது தான் படத்தின் கதை தெரியும். அதேபோல் சத்யா படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கும்போது ‘வலையோசை’ பாடலில் வருவது போல், நான் புட்போர்டு அடித்திருக்கிறேன். கமல்ஹாசன் ஒரு காமெடி கிங் என்று சொல்லலாம். அந்த படத்தில் வரும் காமெடி காட்சிகள் அவர் சொன்னது தான் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

அதேபோல் படங்களில் நடிக்கும்போது நீளமாக முடி வைத்திருக்கும் அமலா தற்போது தினமும் நீச்சல் பண்ணுவதால், நீளமான முடி சரியாக இருக்காது என்று ஷார்ட்டாக வெட்டிவிட்டதாக கூறியுள்ளார். பன்னீர் நதிகள் படப்பிடிப்பின்போது நடிகர் சிவக்குமாரை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு, ஓட்டிக்கொண்டு போனேன். அப்போது அமிதாப் பச்சன் சார் ஷூட்டிங் நடந்தது. அப்போது நான் ஓடிச்சென்று நானும் நடிகை தான் சார் என்று அறிமுகம் செய்துகொண்டேன். அவர் என் பெயரை கேட்டுவிட்டு, பார்த்து ஓட்டிக்கொண்டு போ என்று சொன்னார்.

சினிமாவில் ராதிகா தான் எனக்கு மேக்கப் சொல்லிக்கொடுத்தார். நீ என்ன அழகா இருக்க, ஆனா மேக்கப் சரி இல்லையே என்று சொல்லி, மேக்கப் எப்படி பண்ண வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அதன்பிறகு நானே மேக்கப் போட்டு நடித்தேன். எனக்கு புதிதாக இருந்தது. அதேபோல் மலையாளத்தில் நான் நடித்த என்ட சூர்யபுத்ரி என்ற படத்தில் நடித்தபோது, என்னை பார்க்க, பஸ்ஸில் பல பெண் ரசிகர்கள் வந்தார்கள். அதை பார்த்து எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்று அமலா கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: