Advertisment

அனிகா ஏன் இப்படி மாறிட்டீங்க? ப்ளூ ட்ரஸில் வைரல் க்ளிக்ஸ்

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anikha

விஸ்வாசம் பட நடிகை அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அஜித்தின் மகளாக நடித்திருந்த நடிகை அனிகா சுரேந்தர் வெளியிட்டுள்ள ரீசன்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர் 2007-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானர்.

publive-image

தொடர்ந்து ரேஸ், 5 சுந்தரிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

publive-image

விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான், ஜெயம்ரவியுடன் மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் மம்முட்டியுடன், தி கிரேட் பாதர், பாஸ்கர் தி ராஸ்கல், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

publive-image

அதேபோல் அஜித்துடன் தமிழில் நடித்த விஸ்வாசம் படத்தில் பெரிய பாராட்டுக்களை பெற்றிருந்தார். இந்த படத்தில் கண்ணான கண்ணே பாடல் இவருக்காவே எழுதியது என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

publive-image

மாமனிதன் படத்தில் விஜய்சேதுபதியுடனும் அனிகா நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்த அனிகா தற்போது தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா படத்தில் நாயகியாக மாறியுள்ளார்.

publive-image

தற்போது தமிழில் பிடி சார், வாசுவின் கர்ப்பிணிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை அனிகா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது ப்ளூ ட்ரெஸில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment