Advertisment

அகில உலக சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி... இவரை தெரிகிறதா?

தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் நடித்த ஐஸ்வர்யா மேனன், தற்போது மலையாளத்தில் பாசோகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
iswarya menon

தமிழ் சினிமா நடிகை ஐஸ்வர்யா மேனன்

2012-ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

Advertisment
publive-image

தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யனும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

publive-image
publive-image

மேலும் தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் நடித்த ஐஸ்வர்யா மேனன், தற்போது மலையாளத்தில் பாசோகா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படம் 2 மூலம் பெரும் வரவேற்பை பெற்ற ஐஸ்வர்யா மேனனுக்கு தமிழில் ரசிகர்கள் உள்ளனர்.

publive-image

அதேபோல் ஆதியுடன் இவர் நடித்த நான் சிரித்தால், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான வேழம் உள்ளிட்ட படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஐஸ்வர்யாவுக்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment