Advertisment

மழையில் நடனமாடும் குயின்... விஜய் சேதுபதி ரீல் மகள் வைரல் க்ளிக்ஸ்

உபேன்னா படத்தில் பஞ்ச வைஷ்ணவதேஜா நாயகனாக நடித்த நிலையில், கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Keerthi Shetty

நடிகை கீர்த்தி ஷெட்டி

கஸ்டடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

மும்பையை சேர்ந்த கீர்த்தி ஷெட்டி,  2019-ம் ஆண்டு இந்தியில் வெளியான சூப்பர் 30 என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான உபேன்னா படத்தில் நாகியாக நடித்திருந்தார்.

publive-image

புச்சிபாபு சனா என்பவர் இயக்கிய உபேன்னா படத்தில் பஞ்ச வைஷ்ணவதேஜா நாயகனாக நடித்த நிலையில், கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

publive-image

அடுத்து ஷாம் சிங்க ராய், பங்கார்ராஜூ உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான தி வாரியர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

publive-image

அதன்பிறகு ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்திருந்த கீர்த்தி ஷெட்டி, சமீபத்தில் வெளியான வெங்கட் பிரபுவின் கஷ்டடி படத்தில் நடித்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

publive-image

தற்போது அகயின்டே ரெண்டாம் மோஷனம் என்ற மலையாள படத்திலும், ஜெயின் என்ற தமிழ் படத்திலும் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

publive-image

இதில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் கீர்த்தி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment