Advertisment

என்னை விட்டு விலகிய ஒரே ஹீரோ... நடிகை லைலா வெளியிட்ட ஆதாரம்

42 வயதாகும் நடிகை லைலா சமீபத்தில் யோகா தினத்தை முன்னிட்டு தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Laila

நடிகை லைலா

தமிழ் சினிமாவில் நான் தவறவிட்ட நடிகர் இவர் தான் என்று கூறி நடிகை லைலா நடிகர் விஜயுடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisment

துஷ்மன் துனியா கே என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் லைலா. தொடர்ந்து, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த லைலா விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 2000-ம் ஆண்டு முற்பகுதியில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்த நடித்த லைலா பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இதில் அஜித்துடன் 'தீனா', விக்ரமுடன் 'தில்', பிரசாந்த்துடன் 'பார்த்தேன் ரசித்தேன்' உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த லைலா 'உன்னை நினைத்து', 'நந்தா', 'மௌனம் பேசியதே', 'பிதாமகன்' ஆகிய நான்கு படங்களில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு லைலாவுக்கு கைநழுவி போனது.

விக்ரமன் இயக்கத்தில் சூர்யா நடித்த உன்னை நினைத்து படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் லைலா நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் விஜய். சில கருத்து வேறுபாடு காரணமாக விஜய் அப்படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து சூர்யா அந்த படத்தில் நடித்திருந்தார். ஆனால் விஜய் விலகுவதற்கு முன்பே லைலாவுடன் படத்திற்கான போட்டோஷூட் நடந்துள்ளது.

இதனிடையே கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை லைலா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு "இந் ஒன்று தவறிவிட்டது என்று தலைப்பு வைப்பேன் என்று பதிவிட்டுள்ளார். என்னிடமிருந்து விலகிய ஒரு ஹீரோ இவர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் ஒன்றாக நடித்துள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில் என்னிடம் புகைப்படங்கள் உள்ளன என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது 42 வயதாகும் நடிகை லைலா சமீபத்தில் யோகா தினத்தை முன்னிட்டு தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தினார். ஈரானிய தொழிலதிபர் மெஹ்தி என்பரை திருமணம் செய்து கொண்ட லைலாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் கார்த்தியின் ‘சர்தார்’ படத்தில் ரீ-என்டரி கொடுத்திருந்த லைலா தற்போது ‘ஆலிஸ்’, ‘சப்தம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment