/indian-express-tamil/media/media_files/2025/10/14/navya-nair-childhood-2025-10-14-18-09-08.jpg)
பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் பலரும், சிறுவயதில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல் அந்த நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியானாலும் அதை அவரது ரசிகர்கள் வைரலாக பரவி விடுவார்கள்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இணையத்தில் வளர்ச்சி அதிகமாக இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் சினிமா நட்சத்திரங்களே தங்கள் சிறுவயது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தனது சகோதரருடன் இருக்கும் இந்த சிறுமி தமிழ் சினிமாவில் ஒருசில படங்கிளில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர். இந்த நடிகை யார் தெரியுமா?
பல படங்களில் கதாநாயகியாக நடித்த இந்த நடிகை, தமிழில் சேரன் மற்றும் ஸ்ரீகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். தங்கர் பச்சானுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் இந்த நடிகை வென்றுள்ளார். இந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை நவ்யா நாயர் தான். தனது குழந்தைப் பருவப் புகைப்படத்தை ரசிகர்களுக்காகப் பகிர்ந்துள்ளார். அதில் அவரது தம்பி ராகுலுடன் இருக்கிறார்.
அவரது மாமா கே.மது இயக்கிய 'இஷ்டம்' என்ற படத்தின் மூலம் தான் நவியா நடிப்பைத் தொடங்கினார். இந்தப் படத்தில் திலீப் கதாநாயகனாக நடித்திருந்தார். 'அழகிய தீயே' என்ற படத்தின் மூலம் தமிழிலும் நடித்தார். 2002-ல் வெளியான 'நந்தனம்' படத்தில் பாலமணி என்ற கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் நவியா பெற்றார். பின்னர், 2005-ல் 'கண்ணே மடங்குக' மற்றும் 'சைரா' ஆகிய படங்களில் நடித்ததற்காகவும் விருது கிடைத்தது.
தமிழில் அழகிய தீயே படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்திருந்த நவ்யா, அடுத்து, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், சேரனுடன் மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நவ்யா நாயர் கடைசியாக 2010-ம் ஆண்டு ரசிக்கும் சீமானே என்ற படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்த நவியா, வி.கே. பிரகாஷ் இயக்கிய 'ஒருத்தி' என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார்.
'ஜானகி ஜானே' என்ற படத்திலும் நவியா நடித்தார். ரியாலிட்டி ஷோக்கள், சேனல் நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் என இன்று நவியா பிஸியாக இருக்கிறார். கொச்சியில் 'மாதங்கி' என்ற பெயரில் ஒரு நடனப் பள்ளியையும் நவியா நடத்தி வருகிறார். 'புழு' படத்திற்குப் பிறகு ரதீனா இயக்கியுள்ள பாதிராத்திரி என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இதில் சௌபின் ஷாஹிர் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு இரவில் இரண்டு போலீசார் சம்பந்தப்படும் சம்பவங்களை மையமாக வைத்து கதை நகர்கிறது.
நவியா நாயர், சௌபின் ஷாஹிர் ஆகியோர் நடிக்கும் ஜான்சி, ஹரீஷ் ஆகிய போலீஸ் கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் மூலம் இக்கதை சொல்லப்படுகிறது. அக்டோபர் 17-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.