Tamil Cinema Update : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமல்லாது நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.
விஜய் சேதுபதி சமந்தா ஆகியோருடன் நயன்தாரா இணைந்து நடித்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாக்ஸ்ஆபீஸில் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. தொடர்ந்து இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கி வரும் சிங்கம் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கிரிக்கெட் உலகின் கூல் கேப்டன் என்ற பெயரேடுத்து மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளதாகவும், இந்த வகையில் இவர் தயாரிக்கும் முதல் படம் பெண்களை மையமாக கொண்ட கதையம்சம் உள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறிகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கெத்து காட்டி வருகிறார். மேலும் இன்னும் சில சீசன்கள் சென்னை அணிக்காக விளையாட அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் திரைப்பட தயாரிப்பில் கேப்டன் கூல் திரைப்படத் தயாரிப்பில் நுழைய உள்ளதாவும், இந்த முயற்சிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கி நண்பரான சஞ்சய்யை தனது நிறுவனத்தின் மேலாளராக நியமித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாராவுடன் இணையும் படம் லாபம் தரும் என்று சஞ்சய் கருத்து தெரிவித்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை வரும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. தோனியுடன் அவரது திட்டம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொடங்கும், என்றும் மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil