Advertisment

ஆன்லைன் உணவு இவ்வளவு ஆபத்தா? கரப்பான் பூச்சியால் மிரண்ட நிவேதா பெத்துராஜ்

Nivetha Pethuraj Complaint Against Swiggy Food : நடிகை நிவேதா பெத்துராஜ் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ஆன்லைன் உணவு இவ்வளவு ஆபத்தா? கரப்பான் பூச்சியால் மிரண்ட நிவேதா பெத்துராஜ்

Actress Nivetha Pethuraj Complaint For Swiggy Food: நடிகை நிவேதா பெத்துராஜ் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான்பூச்சி கிடந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இது போன்று நடைபெறுவது இது இரண்டாவது முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

தமிழில் ஒருநாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம், ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழின் ஆகிய படங்களில் நடித்துள்ள அவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

மதுரையை சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது சென்னையில் வசித்து வரும் நிலையில், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஆப் வழியாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார்.  சிறிது நேரத்தில் வீட்டிற்கு டெலிவரி செய்த அந்த சாப்பாட்டில் கரப்பான்பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்து ஆன்லைன் உணவு டெலிவரி பயன்பாடான ஸ்விகி மூலம் உணவு ஆர்டர் செய்திருந்தேன். அந்த உணவு டெலிவரி செய்யப்பட்டதை தொடர்ந்து அதை பிரித்தபோது உணவில் ஒரு கரப்பான் பூச்சியைக் கிடந்தது. இதனால் நான் வெறுப்படைந்தேன். ஏற்கனவே இதே போல் ஒருமுறை நடந்துள்ளது. தற்போது 2-வது முறையாகும். உணவு கொண்டு வருவதில் சுகாதாரம் இல்லை என்று  கண்டித்துள்ளார்.

மேலும் இந்த பதிவுடன் கரப்பான் பூச்சி இருந்த அந்த உணவின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் ஸ்விகி மற்றும் உணவகங்களில் என்ன தரநிலைகள் பராமரிக்கப்படுகின்றன என்பது எனக்குத் தெரியாது. என் உணவில் சமீபத்தில் இரண்டு முறை கரப்பான் பூச்சியைக் கண்டுள்ளேன். இந்த உணவகங்களை ஒரு வழக்கமான அடிப்படையில் ஆய்வு செய்வது மற்றும் தரத்திற்கு ஏற்றதாக இல்லாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது மிகவும் முக்கியம். இப்போதைக்கு, நீங்கள் அனைவரும் தயவுசெய்து இந்த உணவகம் குறித்து புகாரளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் அந்த உணவகத்தின் பெயர் மூன்லைட் டேக்அவே ஓம்ர் என்று பதிவிட்டுள்ள அவர், உணவகம் எப்படி இவ்வளவு பொறுப்பற்றதாக இருக்கும்? ஸ்விகி விரைவாக தனது பயன்பாட்டிலிருந்து இந்த உணவகத்தை அகற்ற வேண்டும், ”என்று கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nivetha Pethuraj Swiggy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment