கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து பொதுவாக என்மனசு தங்கம் என்ற படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மென்டல் மதிலோ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா, அடுத்து தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார்.

இதில் ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடித்தவன், விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், பிரபுதேவாவுடன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அதேபோல் அருண்விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ரெட் படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். நிவேதா.

தற்போது தெலுங்கில் தாஸ்கா தம்கி என்ற படத்தில் நடித்துள்ள நிவேதா தமிழில் நடித்த பார்ட்டி படம் வெளியாகாமல் உள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்

இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், நெட்டிசன்கள் ரசிகர்கள் என பலரும் கமெண்ட் செய்து வருவது வழக்கம்.

அந்த வகையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil