Advertisment

விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்... இன்ஸ்டாவில் வெளியான போட்டோ... ரசிகர்கள் அதிர்ச்சி

மாடலிங் செய்து வந்த பவித்ரா லட்சுமி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து நாய் சேகர் படததில் நடித்திருந்தார்

author-image
WebDesk
New Update
pavithra Lakshmi

Pavithra Lakshmi

விபத்தில் சிக்கி தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருவதாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி வெளியிட்டுள்ள பதிவு தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

மாடலிங் செய்து வந்த பவித்ரா லட்சுமி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசனிவல் பங்கேற்ற இவர், கோமாளியாக வந்த புகழுடன் இணைந்து செய்த சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. ஒரு கட்டத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பவித்ரா லட்சுமி வைல்டு கார் என்ட்ரி மூலம் மீண்டும் வந்து பைனலுக்கு முன்னறினார்.

குக் வித் கோமாளி இவருக்கு நல்ல அறிமுகத்தையும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒரு வாய்ப்பையும் கொடுத்தது. மேலும் சினிமாவிலும் வாய்ப்பை பெற்று கொடுத்தது. அந்த வகையில் நடிகர் சதீஷ் நாயகனாக நடித்த நாய் சேகர் படத்தில், பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா,  அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் கடந்த சில வாரங்களாக இவர் எந்த பதிவுகளையும் வெளியிடாத நிலையில், ரசிகர்கள் பலரும் உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்ப தொடங்கினர். இந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள பவித்ரா லட்சுமி, தான் சிறிய விபத்தில் சிக்கியதாக கூறியுள்ளார்.

இந்த விபத்தில் பெரிய அடி ஒன்னும் இல்லை.தற்போது இந்த விபத்தில் இருந்து மீண்டு வருகிறேன். அதனால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை என்று கூறி, சுவிசர்லாந்து மற்றும் பாரிசில் எடுத்த  புகைப்படங்களை வெளியிட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment