கன்னடத்தில் வெளியான கிர்க்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா, சலோ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த ராஷ்மிகா, தெலுங்கு கன்னடம் மொழி படங்களில் நடித்து வந்தார்.

அதன்பிறகு கடந்த ஆண்டு வெளியான கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது விஜய் நடிப்பில் தயாராகியுள்ள வாரிசு படத்தின் மூலம் தனது 2-வது தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் தற்போது முன்னணி நாயகியாக வலம் வரும் இவர், ஹிந்தியின் மிஷன் மஞ்சு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

அதேபோல் தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த புஷ்பா படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.

மேலும் வாரிசு படம் வரும் 11-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்காக விஜய் ரசிகர்களை போல் ராஷ்மிகாவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், ராஷ்மிகா அவ்வப்போது சமூகவலைதளங்களிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கராத்தே மாஸ்டர் வேடத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil