10 வயதில் மாடலிங், 16-ல் ஹீரோயின்; ரஜினி - கமலுடன் மெகாஹிட் படம் கொடுத்த இந்த நடிகை கனவுக்கன்னி!

பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமாகி, ரஜனிகாந்த், கமல்ஹாசனுடன் வெற்றிப்படங்களை கொடுத்த ஒரு நடிகை, இன்னும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை அடிப்படியே வைத்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமாகி, ரஜனிகாந்த், கமல்ஹாசனுடன் வெற்றிப்படங்களை கொடுத்த ஒரு நடிகை, இன்னும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை அடிப்படியே வைத்துள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
rati3

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை, தனது முதல் படத்திலேயே சிறப்பாக நடித்துவிட்டால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும். அதேபோல் முதல் படம் முன்னணி நடிகர், இயக்குனர் என்றால் அவர்களுக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைப்பதில் சற்று சிரமம் இருக்காது. அந்த வரிசையில், பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமாகி, ரஜனிகாந்த், கமல்ஹாசனுடன் வெற்றிப்படங்களை கொடுத்த ஒருநடிகை, 1981-ம் ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை. அந்த நடிகை யார்?

Advertisment

1979-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரதி அக்னிஹோத்ரி. இநத படம் தான் தமிழில் பாக்யராஜ் ஹீரோவாக அறிமுகமான முதல் படமும் கூட. அதன்பிறகு, நிறம் மாறாத பூக்கள், காதல் கிளிகள், வீட்டுக்கு வீடு வாசப்படி, கமல்ஹாசனுடன் உல்லாச பறவைகள், ரஜினியுடன் முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை, கழுகு என சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் இதில் 1981-ல் வெளியாக கழுகு தான் ரதி தமிழில் நடித்த கடைசி படம்.

rati1

கழுகு படம் வெளியாக 1981-ம் ஆண்டு ஏக் துஜே கே லியே என்ற படத்தின் மூலம் ரதி இந்தி படத்தில் அறிமுகமானார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்த இந்த படம் பாலிவுட்டில் இன்றும் பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது. அதன்பிறகு முழுக்க முழுக்க இந்தி சினிமாவில் கவனம் செலுத்திய ரதி, 1988-ம் ஆண்டு பிறகு ஒரு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டார்.அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த ரதி அக்னிஹோத்ரி தான் முன்னணி நடிகையாக உச்சத்தில் நடிப்பதை நிறுத்தினார்.

ரதி 16 வயதில் திரைப்படத் துறையில் நுழைந்து இந்தி மற்றும் தென்னிந்திய சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ரதி அக்னிஹோத்ரி அந்தக் காலத்தின் பிரபலமான நடிகை. 1960-ம் ஆண்டு அன்று ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ரதி, எப்போதும் ஒரு நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு 10 வயதில் மாடலிங் செய்யத் தொடங்கினார். 16 வயதில், ரதியின் முதல் படமான புதிய வார்ப்புகள் படத்தில் அறிமுகமானார். முதல் இந்தி படமான ஏக் துஜே கே லியே, வணிக ரீதியாக வெற்றி பெற்றது, மேலும் அதன் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆனது.

Advertisment
Advertisements

rajini rathi

ரதி அக்னிஹோத்ரி 1985 ஆம் ஆண்டு அனில் வர்வானி என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து விலகினார். திருமணத்திற்கு பிறகு, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ரதி, திருமணமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் 2015 இல் விவாகரத்து செய்து தனது மகனுடன் தனித்தனியாக வாழத் தொடங்கினர். "ஏக் துஜே கே லியே" படத்திற்குப் பிறகு, ரதி அக்னிஹோத்ரி 1988-ம் ஆண்டுக்கு பின், 2001-ம் ஆண்டு, கூச் காதி கூச் மேதி என்ற படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார். அதன்பிறகு, அமிதாப் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்த ரதி, 2003-ம் ஆண்டு காலி ஹோப் என்ற படத்தில் நடித்திருந்தார்.

rati2

பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2000களின் முற்பகுதியில் சில படங்களில் நடித்தார். ரதி அக்னிஹோத்ரி குறுகிய காலத்தில் கணிசமான புகழ் பெற்றார், ஆனால் திருமணத்திற்குப் பிறகு அனைத்தையும் இழந்தார். ரதி அக்னிஹோத்ரி தனது விவாகரத்துக்குப் பிறகு தனது கதையை விவரித்தபோது, அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இப்போது தனது பெரும்பாலான நேரத்தை போலந்தில் செலவிடம் ரதி, அங்கு, தனது சகோதரி அனிதாவுடன் ஒரு இந்திய உணவகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ரதி அக்னிஹோத்ரியின் மகன் தனுஜ் அக்னிஹோத்ரியும் நடிகராக இருப்பதால், அவரை பார்க்க ரதி, அவ்வப்போது இந்தியாவுக்கு வருகை தருகிறார். 

tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: