Advertisment

ஷூட்டிங்கில் வடிவேலு எப்படினு எனக்கு தெரியும்... ஷகீலா கொடுத்த ஷாக் தகவல்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாக ஷகீலா, தற்போது, யூடியூபில் நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vadivelu Shakeela

வடிவேலு - ஷகீலா

நடிகர் வடிவேலு பற்றி அவருடன் நடித்த பல நடிகர்கள் புகார் கூறி வரும் நிலையில், தற்போது நடிகை ஷகீலா வெளிப்படையாக பேசியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. தனது காமெடி பட்டாளத்துடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள வடிவேலு, ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரெட் கார்டு விதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கினார். சமீபத்தில் இதில் இருந்து மீண்டு வந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் சரியாக வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆனால் வடிவேலு காமெடி கேரக்டரில் நடித்து வந்த காலக்கட்டத்தில் அவருடன் நடித்த பல நடிகர்கள் வடிவேலு தங்களுக்கு எந்த உதவியும் செல்லவில்லை வாய்ப்பு கொடுக்கவில்லை என்று அடுக்கடுக்கான பல புகார்களை கூறி வருகின்றனர்.

இதனிடையே சமீபத்தில் நடிகை பிரேம பிரியாவை பேட்டி எடுத்த நடிகை ஷகீலா வடிவேலு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. 90-களில் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் அறிமுகமான ஷகீலா தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாக ஷகீலா, தற்போது, யூடியூபில் நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற காமெடி நடிகர்களுடன் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பிரேம பிரியாவிடம் பேட்டி எடுத்துள்ளார்.

இந்த பேட்டியில், என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலு தான், எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. நானும் ஷூட்டிங்கிற்கு போவேன், ஆனால், வடிவேலு என்னை பார்த்ததும் இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிடுவார். இதுமாதிரி நிறைய படங்களில் நடந்து இருக்கு. இதை நான் ஒரு யூடியூப் சேனலில் சொல்லிவிட்டதால், என்னை ஒரு இயக்குநர் தொலைபேசியில் மிரட்டி மறுப்பு வீடியோ வெளியிட சொன்னார். ஆனால், நான் முடியாது உண்மையைத் தான் சொன்னேன் என்று சொல்லிவிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் சுறா படத்தில் வடிவேலுவுடன் நடித்த போது, ஏன் வேண்டாம் என்று சொல்றீங்க என்று கேட்டேன் அதற்கு அவர் பதில் சொல்லவில்லை என பிரேம பிரியா சொல்லும்போது குறுக்கிட்ட ஷகீலா, நீ அப்போதே வடிவேலு மீது மீ டூ புகார் கொடுத்து இருக்கலாமே என்று கேட்க. எனக்கும் வடிவேலுக்கும் மீ டூ பிரச்சனை எல்லாம் இல்லை, அது வேறு பிரச்சனை என்று பிரேம பிரியா சொல்கிறார்.

இதை கேட்ட ஷகீலா, இப்போ வேண்டுமானால், மீ டூ பிரச்சனை இல்லை என்று சொல்லாம். ஆனால், வடிவேலுவை பற்றி எனக்கு நன்றாக தெரியும், அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பாரு.. என்ன கேப்பாருனு எனக்கு தெரியும் நான் சொல்வதற்கு எல்லாம் நீ தலையை ஆட்டினால் வடிவேலுவை பற்றி உனக்கும் தெரியும் அப்படித்தானே என்று நடிகை ஷகீலா கேட்கிறார்.

இதற்கு ஆமாம் என்று சொல்லும் பிரேம பிரியா, ஷூட்டிங் ஸ்பாட் போட்டு திரும்பி வந்த தொல்லை தான் இருந்ததே தவிர அந்த மாதிரி தொந்தரவு எதவும் எனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். ஷகீலாவின் இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment