/indian-express-tamil/media/media_files/2025/09/23/shakila-shsh-ruka-2025-09-23-15-54-42.jpg)
இந்தியில் ஷாருக்கானுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், ஆடிஷன் அழைத்ததால், அவரை போல் நானும் முன்னணி நட்சத்திரம் தான், என்னால் ஆடிஷனுக்கு எல்லாம் வர முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டதாக நடிகை ஷகிலா கூறியுள்ளார்.
1994-ம் ஆண்: தமிழில் வெளியான ப்ளே கேர்ள்ஸ் மற்றும் பிரபுவின் ஜல்லிக்கட்டு காளை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷகிலா. தொடர்ந்து பொண்ணு விளையுற பூமி. உதவிக்கு வரலாமா, மறுமலர்ச்சி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், 1998-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்நது மலையாளத்தில் வயது வந்தோருக்கான படங்களில் நடிங்கி வெற்றிகளை குவித்தார், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் கூட இவர் படம் வெளியாகும்போது தங்கள் படங்களை வெளியிட யோசித்தாக கூட தகவல்கள் உள்ளது.
ஒரு கட்டத்தில் படங்களில் காமெடி வேடங்களில நடிக்க தொடங்கிய ஷகிலா, 2003-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில் விளையாட்டு டீச்சர் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு சிவா மனசில சக்தி, மாஞ்சா வேலு, மலை மலை, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருந்த ஷகிலா அழகிய தமிழ் மகன் படத்தில் விஜயுடன் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான வனிதாவின் மிஸஸ் அண் மிஸ்டர் படத்தில் நடித்திருந்த ஷகிலா யூடியூப் சேனல்கள் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஷகிலா, ஷாருக்கானுடன் எனக்கு சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் ஆடிஷன் வைப்பதாக சொன்னார்கள். எனக்கு கோபம் வந்துவிட்டது. அவர் எவ்வளவு பாப்புலரான நடிகரோ அதேபோல் நானும் பாப்புலரான நடிகை. ஷாருக்கானிடம் மலையாளம் ஷகிலான கூகுளில் போட சொல்லுங்க அவர் என்னை பற்றி தெரிந்துகொள்வார். நான் ஆடிஷனுக்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். சத்யராஜ் கூட அந்த படத்திற்கு ஆடிஷன்’ கொடுத்ததாக சொன்னார்கள்.
சத்யராஜ் ஏன் ஆடிஷன் கொடுக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு இந்தி வராது என்று சொன்னார்கள். நான் எனக்கு க்ளியராக இந்தி பேச வரும். எனக்கு இந்த படத்தில் நடிக்க இன்டரஸ்ட் இல்லை என்ற சொன்னேன். அதன்பிறகு என்னை சமாதானம் செய்து வசன பேப்பரை கொடுத்தார்கள். ஆனால் சம்பளம் உதவிளருக்கு கொடுக்கும் சம்பளத்தை சொன்னார்கள். ஷாருக்கான் படத்திற்கு இந்த சம்பளமா என்று எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. இதை பற்றி இனிமேல் பேசாதீங்க என்று சொல்லிவிட்டேன் என ஷகிலா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.