Tamil Serial Actress Sujitha Dhanush : சின்னத்திரை நடிகைகளில் சமூகவலைதளங்களில் அதிகம் ஆக்டீவாக இருக்கும் முண்ணனி நடிகைகளில் ஒருவர் சுஜிதா தனுஷ். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ள சுஜிதா தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகர்களில் முக்கிய இடம்தை பெற்றுள்ளார். சினிமாவில் பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு அடையாளத்தை கொடுத்தது சீரியல்தான்.
நடிப்பு மட்டுமல்லாது விளம்பர படங்களை இயக்கும் வேலைகளை பார்த்து வரும் சுஜிதா சமீபத்தில் தான் நடிகை ஹன்சிகாவை வைத்து இயக்கிய விளம்பர படத்தின் மேக்கிங் வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் கதைகேளு கதைகேளு என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் அவர், மக்களுக்கு பயனுள்ள பல கருத்துக்களையும் கூறி வருகிறார்.
நடிப்பு மற்றும் விளம்பர பட இயக்கம் என பிஸியாக இருந்தாலும் சுஜிதா தனுஷ் வாழ்க்கையை எஞ்சாய் பண்ணவும் நேரம் ஒதுக்குகிறார். அடிக்கடி தனது குடும்பத்துடன் வெளியில் செல்வது, பாடல் பாடுவது, ஜாலியாக அரட்டை அடிப்பது என பல வீடியோக்களில் தனது குறும்புத்தனத்தை காட்டியுள்ளார். இதுபோன்று இவர் பதிவிடும் வீடியோ கட்சியும் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வகையில் தற்போது சுஜிதா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ கட்சி வைரலாகி வருகிறது. குழந்தைகளுடன் வெளியில் சென்றுள்ள சுஜிதா, குழந்தைகளுடன் டிராம்போலைன் பார்க் சென்று வீடியோ வெளியிட்டுள்ளார். எளிமையாக எந்த மேக்கப்பும் இல்லாமல் இருக்கும் அவர், ஜிம்னோஸ்டிக் செய்யும் ரப்பர் போல் உள்ள திரையில் எகிரி குதித்து ஜாலியாக இருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் சூப்பர் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“