/indian-express-tamil/media/media_files/2025/10/09/kalyani-priyadarshan1-2025-10-09-18-56-57.jpg)
சினிமா உலகில் பிரபலங்களாக இருக்கும் பலரும் தங்கள் குழந்தைகளை குழந்தை நட்சத்திமாக சினிமாவில் அறிமுகப்படுத்துவது வழக்கம். அதே சமயம் அந்த வாய்ப்பு வரவில்லை என்றாலும், பெரியவர்கள் ஆனபிறகு, ஹீரோ, அல்லது ஹீரோயினாக தங்கள் மகனையோ அல்லது மகளையோ நடிக்க வைப்பார்கள். அப்படி வரும் வாரிசு நட்சத்திரங்கள், சினிமாவில் தவிர்கக முடியாத சாதனையை செய்துவிட்டால், அவர்களின் சிறுவயது புகைப்படம் முதல் பல பதிவுகள் இணையத்தில் வெளியாகும்.
இந்த செய்தியை மலையாளத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
அந்த வரிசையில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி தற்போது சூப்பர் ஸ்டார் நடிகர் கூட எட்ட முடியாத சாதனையை எட்டியுள்ளார். அந்த வாரிசு நடிகை யார் தெரியுமா? கல்யாணி பிரியதர்ஷன். மலையாள சினிமாவின் பிரபல இயக்குனராக இருக்கும் பிரியதர்ஷனின் மகளான இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா திரைப்படம், பெரிய வரவேற்பை பெற்று ரூ300 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தற்போது மலையாளத்தில் ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் குவிந்துள்ளன.
இந்த ஆண்டு ஓண பண்டிகைக்கு மட்டும் கல்யாணி நடித்த இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அவை 'லோக சாப்டர் 1: சந்திரா' மற்றும் 'ஓடும் குதிரையும் சாடும் குதிரையும்'. இதில் 'லோக' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் கிளப்பிலும் இடம்பிடித்தது ககல்யாணியின் முதல் படம் 2017 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படமான 'ஹலோ'. ஆர்க்கிடெக்ட் படித்த கல்யாணி, நடிப்பதற்கு முன் விக்ரமின் 'இருமுகன்' மற்றும் ஹிருத்திக் ரோஷனின் 'கிரிஷ் 3' ஆகிய திரைப்படங்களில் கலை இயக்க உதவியாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
'வரனே ஆவஷ்யமுண்டு' என்ற படத்தின் மூலம் தான் கல்யாணி மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். 'மரைக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம்', 'ப்ரோ டாடி', 'ஹிருதயம்', 'தள்ளு மாலை', 'ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா' ஆகியவை கல்யாணி மலையாளத்தில் நடித்த குறிப்பிடத்தக்க படங்களாகும். தந்தை, தாய் மட்டுமல்ல, கல்யாணியின் சகோதரர் சித்தார்த் பிரியதர்ஷனும் திரையுலகில் தனது வருகையைப் பதிவு செய்துவிட்டார்.
'மரைக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம்' திரைப்படத்தில் விஎஃப்எக்ஸ் (VFX) பணிகளை மேற்கொண்டதற்காக, சித்தார்த்துக்கு தேசிய விருதும் மற்றும் கேரள மாநில திரைப்பட விருதில் சிறப்பு ஜூரி குறிப்பும் கிடைத்தது. தாயின் பாரம்பரியத்தைக் காக்கும் விதமாக நடிப்புத் துறைக்கு வந்த கல்யாணி, இன்று மலையாள சினிமாவில் ஒரு மின்னும் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழில் சிம்புவுடன் மாநாடு படத்தில் நடித்திருந்த கல்யாண, சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தின் மூலம் அறமுகமானார். தற்போது ஜீன் மற்றும் மார்ஷெல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.