Advertisment

இனி விவாக ரத்துக்கு வாய்ப்பே இல்லை: வனிதா விஜயகுமார்

வாரிசு நடிகை என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும், விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanitha Vijayakumar

Vanitha Vijayakumar

தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நடிகையாக வலம் வரும் வனிதா விஜயகுமார் தான் மீண்டும் திருமணம் செய்துகொண்டதாகவும் இனி விவாகரத்துக்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

பழம்பெரும் தம்பதி விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார் கடந்த 1995-ம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அதன்பிறகு மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகினார்

அதன்பிறகு ஒரு சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய வனிதா விஜயகுமார்3 திருமணங்கள் செய்த நிலையில், தற்போது தனது குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். வாரிசு நடிகை என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும், விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமானார். தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை என பிஸியாக நடித்து வருகிறார்.

இதனிடையே ஏற்கனவே 3 முறை திருமணமான வனிதா விஜயகுமார் தற்போது 4-வது முறையாக திருமணம் செய்துகொண்டதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இதை கேட்டு யார் அந்த நபர் என்று கேட்க, தான் சினிமாவை காதலித்து திருமணம் செய்துள்ளேன். இனி என்னுடைய கவனம் முழுவதும் சினிமாவில் தான் இருக்கும் அதனால் இனி விவாகரத்துக்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha Vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment