scorecardresearch

ஷாக்… வனிதாவுக்கு புதிய நோய் கிளாஸ்ட்ரோஃபோபியா: இதில் இவ்ளோ பிரச்சனை இருக்கு!

பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட், பிபி ஜோடிகள் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமாகியுள்ள வனிதா விஜயகுமார் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Vanitha Vijayakumar
வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா நோய் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 1995-ம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமான வனிதா விஜயகுமார் அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய வனிதா, சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட், பிபி ஜோடிகள் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமாகியுள்ள வனிதா விஜயகுமார் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் என்ற அடையாளதுடன் திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது வனிதா தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

மேலும் 3 முறை திருமணம் செய்துகொண்டாலும், எனக்கு எது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை செய்வதும், தனக்கு என்ற தோன்றுகிறதோ அதை பேசுவதும் என வெளிப்படைத்தன்மை உள்ள வனிதாவுக்கு 3 திருமணமுமே நிலைக்காமல் போய்விட்டது. இதற்காக பலரும் அவரை ட்ரோல் செய்தாலும் அதை கண்டுகொள்ளாத வனிதா தனது வேலைகளை பார்த்து வருகிறார்.

இதனிடையே சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வனிதா விஜயகுமார், தனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா என்ற நோய் நோய் பாதிப்பு இருப்பதாகவும் இது குறித்து தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறியுள்ளார். இந்த நோய் காரணமாக லிப்ட், கழிவறை போன்ற சின்ன இடங்களில் தன்னால் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் கேரவனில் இருக்கும் கழிவறையைகூட தான் பயன்படுத்த மாட்டேன் என்றும், உடை மாற்றிவிட்டு உடனடியாக வெளியில் வந்துவிடுவேன் என்றும் வனிதா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்றபோதும், இந்த பாதிப்பால் தான் அவதிப்பட்டதாகவும் தன்னால் எந்த இடத்திலும் அடைபட்டு இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress vanitha vijayakumar say infection in tamil