திடீர் ட்ரெண்டிங்கில் நடிகை நிவாஷினி: இணையத்தில் வைரல்

மாடலிங், டிஜிட்டர் கண்டண்ட் க்ரியேட்டர், தொழில்முனைவோர் என பன்முக திறமையுடன் இருக்கும் நிவாஷினி, படத்தில் சின்ன கேரக்டராக இருந்தால், அதை தனது நடிப்பால் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் கேரக்டராக மாற்றியுள்ளார்.

மாடலிங், டிஜிட்டர் கண்டண்ட் க்ரியேட்டர், தொழில்முனைவோர் என பன்முக திறமையுடன் இருக்கும் நிவாஷினி, படத்தில் சின்ன கேரக்டராக இருந்தால், அதை தனது நடிப்பால் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் கேரக்டராக மாற்றியுள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
Nivashini

ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஒரு நடிகை ட்ரெண்டாவது வழக்கம் தான். ஆனால் ஒரு படத்தில் சில காட்சிகள் மட்டுமே நடித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு நடிகை இருக்கிறார். அவர் பெயர் நிவாஷினி கிருஷ்ணன். இவர் இந்த அளவுக்கு ட்ரெண்டாக காரணம் என்ன?

Advertisment

விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக அறிமுகமான படம் ஓ எந்தன் பேபி. விஷ்ணு விஷால் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த இந்த படத்தில், மிதிலா பால்கர், அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரொமான்டிக் காமெடி பின்னணியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விமர்சனரீதியாகவும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. இந்த படம் வெளியானது முதல் படத்தில் நடித்த நிவாஷினி கிருஷ்ணன் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

இந்த படத்தில் மிதிலா பால்கர், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்திருந்த நிலையில், மிதிலா பால்கர், நடித்த மீரா கேரக்டரின், உறவினராக நடித்தவர் தான் இந்த நிவாஷினி கிருஷ்ணன். நடித்தது சில காட்சிகள் தான் என்றாலும் கூட இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. தனது அழகால் பலரையும் கவர்ந்த இவர், விரைவில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பான் இந்தியா ஸ்டாரகவும் உருவெடுப்பார் என்று கூறி வருகின்றனர். அதேபோல் திரையில் இவரின் நடிப்பும் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

Advertisment
Advertisements

நிவாஷினி கிருஷ்ணன் தமிழ் சினிமாவுக்கு புதிய முகம் இல்லை என்றும் சொல்லலாம், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற சிங்கப்பூர் போட்டியாளர் இவர் தான். அந்த சீசனில் இளம்வயது போட்டியாளராக இருந்த இவர், தமிழகத்தின் பரமக்குடி பகுதியை பூர்விகமாக கொண்டவர், லண்டனில், கோல்ட்ஸ்மித் யூனிவர்சிட்டியில், பேஷன் மீடியா படித்த இவர், உன்னை கண் தேடுதே என்ற வெப் தொடரிலும், முள்ளும், மலரும் என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். நடிப்பு மட்டும் இல்லாமல் இவரிடம் பன்முக திறமையும் இருக்கிறது.

மாடலிங், டிஜிட்டர் கண்டண்ட் க்ரியேட்டர், தொழில்முனைவோர் என பன்முக திறமையுடன் இருக்கும் நிவாஷினி, படத்தில் சின்ன கேரக்டராக இருந்தால், அதை தனது நடிப்பால் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் கேரக்டராக மாற்றியுள்ளார். மேலும் அடுத்து தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளியுலக்குக்கு தெரிந்தவர் என்றாலும், தனது நடிப்பால், முதல் படத்திலேயே பேசப்படும் நடிகையாக வளர்ந்துள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: