/indian-express-tamil/media/media_files/2025/10/21/bison-water-2025-10-21-18-43-10.jpg)
தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான துருவ் விக்ரமின் பைசன் திரைபபடம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், திரையரங்கு தண்ணீரில் மூழ்கினாலும், நாங்கள் படத்தை முழுதாக பார்த்து வைப் செய்வோம் என்று ரசிகர்கள் முழங்கால் தண்ணீரில் நின்று படம் பார்த்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம். ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், அடுத்து மகான் என்ற படத்தில் தனது அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார், இந்த இரு படங்களுமே ஓரளவு வெற்றியை பெற்றிருந்தாலும், துருவ் விக்ரம் தனி கதையில், தனி ஹீரோவாக நடித்த படம் பைசன்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம், பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பசுபதி, லால், அமீர், ராஷிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
தியேட்டர் குள்ள மழை வந்து வெள்ள வந்தாலும் சரி, Bison படத்தை பார்த்து முடிச்சிட்டு தான் வெளிய போவோம் . 😂🥳💥 #BisonKaalamadan#DhruvVikram#Bisonpic.twitter.com/5F7xCxjU1d
— சாமி 🦁🦬 (@ChiyanSaamy) October 19, 2025
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17-ந் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், துருவ் விக்ரமின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தியேட்டர் புல்லா வெள்ளத்தில் முங்கி போச்சு அப்பகூட தீக்கொளுத்தி பாட்டுக்கு விசில் அடிச்சு Vibe பண்றாங்கப்பா 😂😂💥 #BisonKaalamadan#Bison#DhruvVikrampic.twitter.com/radXX44Jphhttps://t.co/ULghPbUtIT
— சாமி 🦁🦬 (@ChiyanSaamy) October 19, 2025
இந்நிலையில், ராஜபாளையம் பகுதியில் உள்ள சித்ரா சினிமாஸ் தியேட்டரில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், வெள்ளத்தில் நின்று பைசன் திரைப்படத்தை கண்டு ரசித்துள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வைலாகி வருகிறது. தியேட்டரில் ஃபுல்லா வெள்ளம் புகுந்துடுச்சி, அப்போகூட தீக்கொளுத்தி பாடலுக்கு விசில் அடித்து வைப் பண்றாங்கப்பா என்று பதிவிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.