Advertisment

'3 தலைமுறை அனுபவம் உதயநிதிக்கு உதவும்': கமல்ஹாசன், ரஜினிகாந்த் வாழ்த்து

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி இன்று காலை பதவியேற்றவுடன் பல கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.

author-image
WebDesk
New Update
'3 தலைமுறை அனுபவம் உதயநிதிக்கு உதவும்': கமல்ஹாசன், ரஜினிகாந்த் வாழ்த்து

தமிழக சட்டசபையில் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. மேலும் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலினின் மகனும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தாவின் தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. மேலும் அப்போது உதயநிதி பல படங்களில் நடித்து வந்ததால், படங்களை முடித்தவுடன் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.

இதனிடையே கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் என பலரும் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கையை ஏற்று்ககொண்ட முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க முடிவு செய்து ஆளுனரிடம் கடிதம் வழங்கினார்.

இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுனர் இன்று காலை உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமானம் செய்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி இன்று காலை பதவியேற்றவுடன் பல கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.

இதனிடையே அமைச்சர் பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், வாழ்த்துகிறேன் தம்ப. . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது என கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கும், கழக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி ஏற்கும் திமுக இளைஞர் அணியின் மாநில செயலாளர் அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், அனைத்து நல்வாழ்த்துக்களும் வாழ்த்துக்களும்  உதயநிதி ஸ்டாலின் அவர்களே , உங்கள் புதிய போர்வைக்கு நியாயம் வழங்கவும், விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கவும், மாநில அளவில் முதலிடத்தை உருவாக்கவும் நீங்கள் எந்தக் கல்லையும் விட்டுவிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பதிவில், நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும் பந்தையங்களும் போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கனும்! இந்த கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி உதயநிதி ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment