Cinema Celebrities Instagram Update : பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருகினறனர். குறிப்பாக சினிமாவுக்கு இணையாக நடிகர் நடிகைகள் விளம்பரங்களிலும் அதிக சம்பளம் பெற்று வருகினறனர். பெரிய நட்சத்திரங்கள் முதல் சின்னத்திரை நடிகர் நடிகைகள் வரை அனைவருமே விளம்பரங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் நட்சத்திரங்களின் விளம்பரங்களில் அவர்களின் முகத்தை பார்த்தாலே அந்த பொருளை வாங்கிவிடும் அளவுக்கு ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. இதனால் சினிமா போன்று விளம்பரங்களும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பெண் கவரும் வகையில் அழகுசாதனை பொருட்கள், துணிகள், அணிகலன்கள் மற்றும் இதர பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியாவில் பல மொழி நட்சத்திரங்கள் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், சமீப காலமாக முன்னணி நடிகர் நடிகைகள் பலரும், வெளிநாட்டு மதுபானங்கள் தொடர்பான விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் கண்டன குரல்கள் வலுத்து வந்தாலும் விளம்பரங்கள் ஒரு சாரார் மத்தியிலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வாங்கும் பொருட்கள் தரமற்றதாக இருந்தாலும், விளம்பரத்தில் நடித்த நட்சத்திரங்கள் சர்ச்சையை சந்திக்கின்றனர்.
ஆனாலும் விளம்பரங்களில் நடிப்பது பலருக்குமு் பிடித்தமான ஒன்றாக உள்ளது. அதிலும் சமீப ஆண்டுகளாக சமூகவலைதளங்கள் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளதால், சினிமா நட்சத்திரங்களின் பக்கங்களுக்கு அதிக ரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்திக்கொண்டு அவர்களும், விளம்பரங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகினறனர். இதன் மூலம் நடிகர் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் வரவு வந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில் இன்ஸ்டாகிரம் மூலம் அதிக சம்பளம் பெரும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சுஜிதா தனுஷ்</strong>
பிறந்த சில மாதங்களிலேயே திரைத்துறையில் அறிமுகமான சுஜிதா தனுஷ், அஜித்துடன் வாலி படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். தனம் என்ற கேரக்டரில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா தனுஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 9.75 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ளார். அவ்வப்போது இவர் இடும் பதிவுகள் இணையத்தில் வைராகி வருகிறது. இவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல கதைகளை கூறி வருகிறார்.
ரோஷ்னி ஹரிப்பிரியன்
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்த ரோஷ்னி, சமீபத்தில் அந்த சீரியலில் இரந்து விலகினார். ஆனாலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி குக் வித் கோமாளி சீசன் 3-ல் பங்கேற்று வருகிறார். தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், 9.69 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ள இவர், அழகு சாதனங்கள் மற்றும் ஆடைகள் தொடர்பான விளம்பரங்களை பதிவிட்டு வருகிறார்.
ப்ரீத்தி சர்மா
சன்டிவியின் சித்தி 2 சீரியல் மூலம் புகழ் பெற்றுள்ள நடிகை ப்ரீத்தி சர்மா குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரீத்தி சர்மா 6.68 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ளார். இதில் அழகு சாதன பொருட்கள் மற்றும் மாடலிங் அணிகலன்கள் தொடர்பான விளம்பரங்களை பதிவிட்டு வருகிறார். ஷ
ராதிகா ப்ரீத்தி
சன்’டிவியின் பூவே உனக்காக சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை ரதிகா ப்ரீத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். ஆனால் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து அவர் விலகியுள்ளதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி 4.65 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ளார். இதில் அழகு சாதனம் மற்றும் வளையல் போன்ற பொருட்கள் தொடர்பான விளம்பரங்களை பகிர்ந்து வருகிறார்.
கம்பம் மீனா
பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்யலட்சுமி சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ள நடிகை கம்பம் மீனா, சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.31 லட்சம் ஃபாலோர்யர்களை வைத்துள்ள அவர் ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார், அழகு சாதன பொருட்கள் தொடர்பான விளம்பரங்களையும் பகிர்ந்து வருகிறார். இவர் பதிவிடும் விளம்பரங்கள் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
வினுஷா தேவி
சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரீட்சயமான வினுஷா தேவி தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் 2.19 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ள இவர், சேலை மற்றும் ஆடை அணிகலன்கள் தொடர்பான விளம்பரங்களை பகிர்ந்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “