Advertisment

காமராஜர் திறந்து வைத்த சாந்தி தியேட்டர்: இதில் இவ்வளவு வரலாறு இருக்கா?

தமிழகத்தில் அதிக இருக்ககைள் கொண்ட முதல் திரையரங்கம் என்ற பெரும் சாந்தி திரையரங்கத்திற்கு உண்டு. இந்த திரையரங்கின் பால்கனியில் மட்டுமே 450- இருக்கைள் இருந்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Santhi Theater Chennai

சென்னை சாந்தி திரையரங்கம்

சென்னை நகரத்தின் அடையாளங்களில் ஒன்று சாந்தி திரையரங்கம். 1961-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி சென்னையில் சாந்தி திரையரங்கம் அன்றைய முதல்வர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஏ.சி.வசதியுடன் சென்னையில் தொடங்கப்பட்ட முதல் திரையரங்கம் சாந்தி திரையரங்கம் தான். ராஜ ராஜ சோழன் படத்தை தயாரித்த ஜி.உமாபதி என்பவர் இந்த திரையரங்கை கட்டினார்.

Advertisment

இந்த சாந்தி திரையரங்கும் குறித்து ஜி.உமாபதியின் மகன் கருணாகரன் பல வருடங்களுக்கு முன்பு கூறியபோது, இந்த திரையரங்கம் கட்டும்போது எனக்கு வயது 16. இதன் கட்டிட பணிகள் 1960-ம் ஆண்டு தொடங்கிய 61-ம் ஆண்டு நிறைவடைந்தது. என் தந்தை உமாபதியும், சிவகங்கை சமஸ்தான ராஜாவான சண்முக ராஜாவும் சேர்ந்து இந்த திரையரங்கை கட்டினார்கள். 1250 இருக்கைள் கொண்ட இந்த திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் படம் தூய உள்ளம்.

தமிழகத்தில் அதிக இருக்ககைள் கொண்ட முதல் திரையரங்கம் என்ற பெரும் சாந்தி திரையரங்கத்திற்கு உண்டு. இந்த திரையரங்கின் பால்கனியில் மட்டுமே 450- இருக்கைள் இருந்தன. பால்கனில் இத்தனை இருக்ககைள் கொண்ட திரையரங்கம் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. மும்பையில் உள்ள ஒரு பெரிய திரையரங்கை பார்த்து அதில் உள்ள சிறப்புகளை சாந்தி திரையரங்கில் அமைத்துள்ளனர்.

பாசமலர், பாவமன்னிப்பு போன்ற சிவாஜி கணேசன் நடித்த பல திரைப்படங்கள் சாந்தி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. சிவாஜி நடித்த ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அவரின் மற்றொரு படம் வெளியாகும். தென்னிந்திய சினிமாவை விரும்புபவர்கள், சென்னைக்கு வரும் வெளியூர்காரர்கள் சாந்தி திரையரங்கை பார்க்காமல் போகமாட்டார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விரும்பியதால் சாந்தி தியேட்டரை அப்பா அவருக்கே கொடுத்துவிட்டார்.

அதே விரைவில், அதன் அருகே 20 கிரவுண்ட நிலம் வாங்கி மற்றொ திரையரங்கை கட்டினோம். ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதால் என் தம்பி பெயரில் ஆனந்த் திரையரங்கம் என்று பெயர் வைத்தோம். முதலில் சாந்தி திரையரங்குக்கு மனசாட்சி என்று பெயர் வைக்க யோசித்தோம். பின்னர் சாந்தி என்ற பெயரை தேர்வு செய்தோம். சாந்தி என்ற தங்கையின் பெயர். சிவாஜி கணேசனின் மகள் பெயரும் சாந்திதான். அதனால் தான் அவர் இந்த திரையரங்கை விலைக்கு வாங்கிய பின்னரும் பெயரை மாற்றாமல் இருந்தார் என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் தன் வாழ்நாளில் சாந்தி திரையரங்கை பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள மிக்பெரிய விஐபிகள் பலரும் அதிகமுறை படம் பார்த்த திரையரங்கம் என்றால் அது சாந்தி திரையரங்கம் தான். இந்த திரையலங்கில் பாவமன்னிப்பு, பாலும் பழமும், இருவர் உள்ளம், கர்ணன், சாந்தி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், ஊட்டிவரை உறவு உள்ளிட்ட பல சிவாஜி படங்கள் 100 நாட்களுக்கு மேலாக ஓடியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment