தமிழ் சினிமா அரசியல் என இரண்டிலும் தனது ஆழமான பதிப்பை விட்டுச் சென்றுள்ள எம்.ஜி.ஆர்ரை எம்.ஆர்.ராதா சுடு்டது ஏன் என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் கேள்விக்கு தற்போது எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.
பழங்காலத்தில் இருந்து தமிழ் சினிமா என்று எடுத்துக்கொண்டால் அதில் எம்.ஜி.ஆர் செய்த சாதனைகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது . 1936-ம் ஆண்டு வெளியான சதிலீவதி படம் தொடங்கி பல வெற்றிப்படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நாட்டு மக்களுக்கு தேவையான பல கருத்துக்களை தனது படங்களின் மூலமாக மக்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர்

சினிமா மட்டுமல்லாமல் அரசியலில் தனது இருப்பை பதிவு செய்துள்ள எம்.ஜி.ஆர். நாட்டு மக்களுக்காக பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதனிடையே 1967-ம் ஆண்டு நடிகவேல் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவம் அப்போது மட்டுமல்லது இப்போது பரபரப்பாக பேசக்கூடிய ஒரு நிகழ்வாக உள்ளது.
தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள இந்த சம்பவம் குறித்து இப்போதும் பலரும் அலசி ஆரய்ந்து வருகின்றனர். மேலும் பல யூடியூப் சேனல்களில் எம்.ஆர்.ராதா ஏன் எம்.ஜி.ஆரை சுட்டார் என்பது குறித்து பல போலி தகவல்களை பதிவிடுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது
இதனிடையே எம்.ஆர்.ராதா ஏன் எம்.ஜி.ஆரை சுட்டார் அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது குறித்து எம்.ஆர்.ராதா மகனும் பிரபல நடிகருமான ராதாரவி கூறியுள்ளார். முதலில் எம்.ஜி.ஆரும் எங்க அப்பாவும் நல்ல நண்பர்கள். அப்போது எங்க அப்பாவுக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர் வாசு பெற்றால் தான் பிள்ளையா என்ற படம் எடுக்க ஒரு லட்சம் பணம் வேண்டும் என்று சொன்னார்.

அதற்கு எங்க அப்பா பணத்தை நானே தருகிறேன் என்று சொல்ல புரட்சித்தலைவர் கால்ஷீட் வேண்டும் என்று சொன்னார். அதற்கும் ஓ வாங்கி தரேன் என்று சொன்னார். இது எங்க அப்பாவின் 100-வது படம். ஆலந்தூர் சேட்டுகிட்ட எங்க தோட்டத்து பத்திரத்தை வைத்து ஒரு லட்சரூபாய் வாங்கி கொடுத்தார். இந்த பணத்தை வாசுதானே திருப்பி தரணும். அது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது அதெல்லாம் வேண்டானே நானே தருகிறேன் என்று புரட்சித்தலைவர் ஒப்புக்கொண்டார்.
இவர் கொடுக்கிறேன் என்று சொன்னதால் வந்த பிரச்சனைதான் இதற்கு காரணம். அவர் பணம் கொடுக்காமல் 3, 4 நாட்கள் சுத்த விட்டுக்கொண்டிருந்தார். எங்க அப்பா எப்போமே ஷாட்டெம்பர். உடனே அவருக்கு கோவம் வந்துடுச்சி. எங்கப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டது ஒன்னுதான் கோவத்தில் முடிவு எடுக்க கூடாது. அதே மாதிரி அன்பாக இருக்கும்போது சத்தியம் செய்யக்கூடாது.

அப்போது வந்த கோவத்தில் தான் எங்க அப்பா எம்.ஜி.ஆரை சுட்டார். எங்க அம்மா எங்க அப்பா அப்போ செம்மாய திட்டுனாங்க ஒரு லட்சம் பணம் தானே போனா போகுது நீ எதுக்காக இப்படி செஞ்ச என்று கேட்டு சண்டை போட்டார். உன்னால குடும்பம் எவ்வளவு பதிவுப்பு தெரியுமா என்று கேட்டு கடுமையா சண்டை போட்டதாக ராதாராவி கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் எங்க அப்பாவுக்கு 7 வருடம் தண்டனை கிடைத்தது. சுப்ரீம் கோர்ட் போய்டு அதை 3 வருடமாக மாற்றினோம். அதன்பிறகு கருணாநிதி ஆட்சிக்கு வந்தபின் எங்க அப்பாவை உடனாடியாக விடுதலை செய்து உத்தரவிட்டார். கலைஞர் இல்லை என்றால் எங்க அப்பாவை உள்ளயே வச்சி முடிச்சிருப்பாங்க என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“