சினிமாவில் 5 புருஷன், ஆனா திருமணம் என்றாலே வெறுப்பு: காமெடி நடிகை பிரியங்கா வாழ்க்கை இவ்ளோ சோகமா?

2 பெண் குழந்தைகள் பிறந்த பிறகு, எனது கணவர் என்னை பிடிக்கவில்லை என்று கூறி, விவாகரத்து செய்துவிட்டார். திருமணமாகி 6 வருடத்தில் விவாகரத்து பெற்று விட்டேன்.

2 பெண் குழந்தைகள் பிறந்த பிறகு, எனது கணவர் என்னை பிடிக்கவில்லை என்று கூறி, விவாகரத்து செய்துவிட்டார். திருமணமாகி 6 வருடத்தில் விவாகரத்து பெற்று விட்டேன்.

author-image
D. Elayaraja
New Update
Priyanka In Tamil Cinema

பொதுவாக திரைத்துறையில் காமெடியால் ரசிகர்களை மக்களையும் சிரிக்க வைக்கும் பல நட்சத்திரங்களின் நிஜ வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதே இல்லை என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அந்த வரிசையில், மருதமலை படத்தில், 5 கணவரை வைத்திருக்கும் பெண்ணாக நடித்த நடிகை பிரியங்கா, எத்தனை ஜென்மம் எடுத்தாலும், தனக்கு இனி திருமணமே இல்லை என்ற முடிவில் உள்ளார்.

Advertisment

அவரின் இந்த முடிவுக்கு, தனது தனிப்பட்ட வாழ்க்கை, கணவரால் ஏற்பட்ட துன்பங்களும் தான் காரணம் என்று நேர்காணல் ஒன்றில் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார் பிரியங்கா. மருமதலை படத்தில் வரும் போலீஸ் ஸ்டேஷன் காமெடி பலராலும் மறக்கமுடியாத காமெடி. இந்த காமெடியை இன்றைக்கு பார்த்தாலும் சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு முகபாவனையில் கலக்கிய பிரிங்கா, காதல் தேசம் படத்தில் வடிவேலுடன் இணைந்து நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு கேரக்டர் நடிகையாக பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த இவர், வடிவேலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். வில்லன் படத்தில் நாயகி கிரணின் தோழியாக அஜித்தை காதலிக்கும் பெண்கள் கூட்டத்தில் ஒருவராகவும் நடித்திருந்ப்பார். இடையில் சினிமா பக்கம் இருந்து விலகிய பிரியங்கா, சில வருட இடைவெளிக்கு பிறகு, சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய நிலையில், தற்போது கண்ணத்தில் முத்தமிட்டால் சீரியலில் வில்லி அவதாரம் எழுத்துள்ளார்.

அதேபோல் சமூகவலைதளங்களில் தனது தங்கை மற்றும் குடும்பத்துடன் வீடியோ மற்றும் ஷாட்ஸ் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பிரியங்கா அளித்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். நான் சினிமாவில் நடிக்கும்போதே திருமணம் ஆகிவிட்டது. திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்று கணவர் சொன்னதால், நடிக்கவில்லை. அவருக்கு தஞ்சை மாவட்டம் என்பதால், நான் சென்னையை காலி செய்துவிட்டு தஞ்சைக்கு சென்றுவிட்டேன். 2 பெண் குழந்தைகள் பிறந்தது.

Advertisment
Advertisements

அதன்பிறகு எனது கணவர் என்னை பிடிக்கவில்லை என்று கூறி, விவாகரத்து செய்துவிட்டார். நானும் தஞ்சையை காலி செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். திருமணமாகி 6 வருடத்தில் விவாகரத்து பெற்று விட்டேன். அம்மாவுக்கு புற்றுநோய் என்பதால், அவரை பார்த்தக்கொள்ள இங்கேயே இருந்துவிட்டேன். எனது முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறது. ஆனால் எனக்கு இன்னொரு திருமணத்தில் விருப்பமே இல்லை. குழந்தைகளுடன் இப்படியே இருக்கவே விரும்புகிறேன்.

கடவுள் நமக்கு எழுதி வைத்தது இவ்வளவுதான் இருந்தேன் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இனி திருமணம் செய்ய மாட்டேன். படத்தில் தான் 5 புருஷன் இருக்க மாதிரி காமெடிக்காக நடித்தேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் அதெல்லாம் ஒத்துவராது. என் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களே போதும் ருமண வாழ்க்கை குறித்தே வெறுப்பாக இருக்கிறது என்று பிரியங்கா தனது வாழ்க்கையின் சோகத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: