/indian-express-tamil/media/media_files/2025/10/28/ilayaraja-mohan-2025-10-28-11-40-58.jpg)
தமிழ் சினிமாவில் போகிற போக்கில் பல ஹிட் பாடல்களை கொடுத்த இளையராஜாவே, ஒரு சாதாரன டியூன் போட்டு அந்த பாடலை பதிவு செய்ய படாதபாடு பட்டுள்ள சம்பளம் பலரும் அறியாத ஒரு தகவல். இந்த பாடல் இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது.
இசை உலகில் பல சாதனைகளை படைத்த இளையராஜாவின் சாதனைகள் குறித்து சொல்லவே வேண்டாம். சிவக்குமார் தொடங்கி இன்றைய சூரி வரை பல முன்னணி நடிகர்களுக்கு தனது இசையில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இளையரஜா 75 வயதை கடந்த பின்னரும் இன்றைய இளம் தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், பணியாற்றி வருகிறார். அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வரும் இவர், அதில் தனது பாடல்கள் உருவான விதம் குறித்தும் கூறி வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் வரும் ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்ற பாடல் உருவான விதம் குறித்து கூறியுள்ளார். 1980-ம் ஆண்டு வெளியான படம் தான் நெஞ்சத்தை கிள்ளாதே. மகேந்திரன் இயக்கிய இந்த படம் தான் நடிகை சுஹாசினி தமிழில் அறிமுகமான முதல் படம். சரத்பாபு, பிரதாப் போத்தன், மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
இந்த படத்தில் வரும் ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கான சூழ்நிலையை சொன்ன இயக்குனர் மகேந்திரன், காலை நேரத்தில், லவ்வர்ஸ் ரன்னிங் போகும்போது பாடுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட இளையராஜா, காலை வேளை என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அந்த பாடலுக்கான டியூனை அமைத்துள்ளார். ஆனால் பாடலின் தொடக்கத்தில் அவர்கள், ரன்னிங் போகும் காலடி சத்தத்துடன் தொடங்கலாம் என்று யோசித்துள்ளார்.
இதற்காக பாடல் ரெக்கார்டிங்கின்போது, மைக் அருகில் ஒருவரை அமர நிற்க வைத்து நடப்பது போல் காலை ஆட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த சத்தம் எறைச்சலாக இருந்துள்ளது. அதன்பிறகு பல வழிகளில் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தின் இளையராஜா தன்னிடம் தபேளா வாசித்த கண்ணையா என்பவரிடம் சொல்லி தொடையை தட்டுமாறு கூறியுள்ளார். அதன்படி அவரும் தட்ட இளையராஜா எதிர்பார்த்த சவுண்ட் கிடைத்துள்ளது. அதன்பிறகு இந்த பாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் ஹிட்டான ஒரு பாடலாக நிலைத்திருந்தாலும், இந்த பாடலை அப்போது பதிவு செய்ய 8 மணி நேரம் ஆனதாக இளையராஜா கூறியுள்ளார். இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி பாடியிருந்தனர். இந்த படத்திற்கு, தேசிய விருது மற்றும் தமிழக அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us