பிரசவம் ஆகுற நேரம், ஏதாவது ஆச்சுனா அவர் தான் பொறுப்பு; மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசில்டா புகார்!

ஜாய் கிரிசில்டா, தற்போது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை போல் 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் என்று கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார்.

ஜாய் கிரிசில்டா, தற்போது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை போல் 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் என்று கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
Joy Crizilda

கஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் நாளுக்கு நாள் பரபரப்பை அதிகரித்து வரும் நிலையில்,  மாதம்பட்டி ர்கராஜ் தன்னைப்போல் 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் என்று ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் திருணத்திற்கு கேட்ரிங் சர்வீஸ் செய்து அசத்தி வருபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து பென்குயின் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ரங்கராஜ் நடுவராக பங்கேற்று வரும் நிலையில், இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இதனிடையே, தனது காஸ்டியூம் டிசைனரான ஜாய் கிரிசில்டாவை 2-வது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜாய் கிரிசில்டா, தான் ரங்கராஜ் குழந்தையை வயிற்றில் சுமப்பதாகவும், அதற்கு ராஹா ரங்கராஜ் என்று பெயர் வைத்துள்ளதாகவும் புகைப்படங்கள் வெளியிட்டு வந்த நிலையில், தன்னுடன் வாழ மறுக்கிறார் என்று ரங்கராஜ் மீது புகார் அளித்திருந்தார். இந்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த புகார் குறித்து காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ள ஜாய் கிரிசில்டா, தற்போது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை போல் 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் என்று கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார். அவரது வழக்கறிஞர்ருடன் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த கிரிசில்டா, இந்த புகார் குறித்து எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. அதே சமயம் இந்த குழந்தைக்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

Advertisment
Advertisements

நான் இப்போது டெலிவரி சூழ்நிலையில் இருக்கிறேன். இதனால் குழந்தையை அவர்கள் தரப்பில் இருந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் எனக்கும் என் குழந்தைக்கும் என்ன நடந்தாலும், அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் பலரும் என்னை தொடர்புகொண்டு பேசுகிறார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து நான் நீதிமன்றத்தில் சொல்கிறேன் என்று கிரிசில்டா கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.

Madhampatty Rangaraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: