தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத படங்களில் ஒன்றான 16 வயதினிலே படம் குறித்து இயக்குனர் பாராதிராஜா தனது நினைவுகளை பகிர்ந்துகொண்ட வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் பாரதிராஜா. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானா, கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், காந்திமதி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் இன்றளவும் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
இயக்கிய முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாரதிராஜா தொடர்ந்து, கிழக்கே போகும் ரயில், டிக்.டிக்,டிக், சிகப்பு ரோஜாக்கள், கல்லுக்குள் ஈரம், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, கைதியின் டைரி, கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை, கருத்தம்மா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கிராமத்து கதைகள் என்றாலும் சரி நகரத்து கதைகள் என்றாலும் சரி தனது தனித்திறமையை வெளிப்படுத்தியவர் பாரதிராஜா.

அண்ணன் தங்கை பாசத்திற்கு கிழக்கு சீமையிலே, காதலுக்கு அலைகள் ஓய்வதில்லை, த்ரில்லருக்கு சிகப்பு ரோஜாக்கள் உன பல ஜானர்களில் படங்களை இயக்கியுள்’ள பாரதி ராஜா, நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார். ஆயுத எழுத்து படத்தில் வில்லனாக நடித்த பாரதி ராஜா, பாண்டிய நாடு படத்தில் விஷாலின் அப்பாவாகவும், சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாகவும் நடித்திருந்தார்.
16-வயதினிலே படத்திற்கு பிறகு பாரதி ராஜா பல படங்களை இயக்கி இருந்தாலும் அவர் பெயரை சொல்லும்போது முதலில் நினைவுக்கு வருவது இந்த படம் தான். பாரதி ராஜா மட்டுமல்லாமல், இந்த படத்தில் நடித்த கமல்ஹாசன் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் ஆகியோருக்கும் இந்த படம் பெரிய பெயரை பெற்று கொடுத்தது.
இந்நிலையில், இந்த 16 வயதினிலே படம் உருவான விதம் குறித்து பாரதி ராஜா சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. என் இனிய தமிழ் மக்களே என்ற யூடியூப் தளத்தில் இருக்கும் இந்த வீடியோவில் பேசும் பாரதிராஜா,
16 வயதினிலே இந்த படத்திற்கு முதல் தலைப்பு மயில். முதல்முறையாக என்னுடைய முதலாலி ராஜ் கண்ணு என்னிடம் உன் கதையை சொல் என்று சொன்னார். வேற எதோ படம் எடுக்கத்தான் கதை கேட்கிறார் என்று நினைத்து, சிகப்பு ரோஜாக்கள், மயில், மற்றும் இன்னொரு இசை சம்மந்தமாக ஒரு கதை என 3 கதைகள் அவரிடம் சொன்னேன். இதில் அவருக்கு மயில் கதை பிடித்திருந்தது.

ஆனால் இந்த படம் ஒரு ஆர்ட் ஃபிலிமாக இருக்கும் இதை பிளாக் அன்ட் வொயிட்ல பண்ணலாம்னு இருக்கேன் என்று சொன்னேன். ஆனால் அவர் நான் சொல்வதை கேளுங்கள் இந்த கதைதான் ஓகே என்று சொன்னார். அப்போது இந்த கதையை யார் இயக்க கொடுக்க போகிறீர்கள் என்று கேட்க அப்போது முன்னணி இயக்குனர்களாக இருந்த எஸ்.பி.முத்துராமன், தேவராஜ் ஆகியோரை சொன்னேன்.
ஆனால் அவர் நான் ஒருவரை பிக்ஸ் பண்ணிட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இருவரும் பேசிக்கொண்டே வந்துகொண்டிருந்தேன். என் பாக்கெட்டில் 5 ரூபாய் வைத்துவிட்டு இந்த படத்தை நீங்கள் தான் இயக்க போகிறீர்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு படத்திற்காக ஒரு ஆபீஸ் ஓபன் செய்தோம் பட வேலைகள் சென்றது.
இந்த படத்தை கலர் படமாக எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டதால் ஆர்ஓ ஃபிலிம் பேசினோம். அதன்பிறகு முடிவு பண்ணி படத்தை தொங்கிவிட்டோம். 500 அடி ஃபிலிம் வேண்டும் என்றால் வெளியில் இருந்து பெங்களூர் வரும் அதன்பிறகு இங்கிருந்து பெங்களூர் போய் அதை வாங்கி வரவேண்டும். ஃபிலிம் காஸ்ட் அதிகம் என்பதால் தேவையானதை நடிகர் நடிகைகளிடம் கேட்டு பெற்றேன்.
இந்த படம் எடுக்கும்போது கமல் பாப்புலர் ஆக்டர். அப்போது ஒருநாள் ஃபிலிம் வர லேட் ஆகிவிட்டது. கமல் கால்ஷீட் வேஸ்ட் ஆகிவிட கூடாது என்பதால், ஓணான் அடிக்கிற சீனுக்காக ட்ராலி ஒன்றை போட்டு அதில் கேமராவை பிக்ஸ் பண்ணிட்டோம். இதில் கேமராவில் ஃபிலிம் இல்லை என்பது எனக்கும் கேமராமேனுக்கும் மட்டும்தான் தெரியும். ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் அப்படினு சொன்ன உடனே கமல் நடிகக் ஆரம்பிச்சிட்டார். ஆனால் சில நிடங்களில் கமல் நிறுத்த சொல்லிட்டார். .பிலிம் இல்லை என்பதை கேமரா காட்டிகொடுத்துவிட்டது.
இதை தெரிந்துகொண்ட கமல் என்ன நடக்குது இங்க என்று கேட்டார். ஃபிலிம் இல்லனு சவுண்ட் சொல்லிடுச்சே அப்புறம் ஏன் இப்படி பண்றீங்க என்று கேட்டார். வேணுனா படம் நான் ஒன்று கொடுக்கிறேன் எடுங்க. ஆனால் இப்படி எல்லாம் படம் எடுக்க கூடாது என்று சொல்ல, ஃபிலிம் பெங்களூரில் இருந்து வருகிறது என்று சொல்லி சமாளித்தேன். இப்படி எல்லாம் பண்ணிதான் 16 வயதினிலே உருவானது என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/