ரஜினி முதல் மோகன்லால் வரை : இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

Director K.V.Anand Passed Away : தமிழ் சினிமாவின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான கே.வி.ஆனந்த் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Director K.V.Anand Passed Away Celebrities Condolence: தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் வலம் வந்த கே.வி ஆனந்த், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இன்று அதிகாலை 3 மணியளவில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1966-ம் ஆண்டு சென்னையில் பிறந்த கே.வெங்கடேசன் ஆனந்த், சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தொடர்ந்து போட்டோகிராபியில் ஆர்வம் மிகுந்த அவர் 1988 முதல் 92 வரை பல தேசிய பத்திரிக்கைகளில் ப்ரீலான்சராக பணியாற்றியுள்ளர்.  இவரது போட்டோக்களை பார்த்த இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம், அவரை தனது உதவியாளாக சேர்த்துக்கொண்டார்.

தொடர்ந்து கடந்த 1994-ம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான தென்மாவின் கொம்பேத் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழில் காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ் ஆகிய தமிழ் படங்கள் உட்பட ஒரு சில ஹிந்தி படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாறியுள்ளார். தமிழில் கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தொடர்ந்து 2005-ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடாந்து, அயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் ஆகிய படங்களை இயக்கினார். இதில் 3 படங்களில் சூர்யா நாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வந்த கே.வி.ஆனந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில்  மரணமடைந்தார்.

இவரது மரணம் தமிழ் சினமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் தனுஷ் தனது பதவில், ஒரு மென்மையான நேர்மையான மனிதர் இறந்துவிட்டார். அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த மிக இனிமையான மனிதன். கே.வி ஆனந்த் சார் .. மிக விரைவில் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஆத்ம சாந்தியடையுங்கள் கே.வி.சார் என பதிவிட்டுள்ளர். தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் பார்வையில் இருந்து சென்றுவிட்டீர்கள், ஆனால் ஒருபோதும் எங்கள் இதயத்திலிருந்து நீங்கள் போக. கே.வி. ஆனந்த் சார் உங்களை மிஸ் செய்கிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். பிரணங்கள் என பதிவிட்டுள்ளார். கே.வி. ஆனந்தின் முதல் ஒளிப்பதிவான தென்மாவின் கொம்பேத் என்ற மலையாள படத்தின் நாயகன் மோகன்லால் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த், மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema director kv anand passed away celebrities fans condolence

Next Story
Sun TV Serial: பெட்ரூமில் மைக்; சிக்கிக்கொண்ட ரோஜா- அர்ஜுன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com