Advertisment

கொரோனா நோயாளிகளுக்கு ஆசிரமம்: முன்மாதிரியாக நிற்கும் இயக்குனர் லிங்குசாமி

Ahsram For Covid Patient : கொரோனா தொறறால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக இயக்குநர் லிங்குசாமி ஆசிரமம் தொடங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
கொரோனா நோயாளிகளுக்கு ஆசிரமம்: முன்மாதிரியாக நிற்கும் இயக்குனர் லிங்குசாமி

கடந்த 2001-ம் ஆண்டு வெளியான மம்முட்டி, முரளி, அப்பாஸ் நடிப்பில் வெளியான ஆனந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவனர் லிங்குசாமி. தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா என ஹிட் படங்களை இயக்கிய அவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறினார்.

Advertisment

கடந்த சில வருடங்களாக படம் இயக்கமால் இருந்த லிங்குசாமி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் போத்தினேனி நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது.  இந்த இடைவெளியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் வசந்த பாலன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு லிங்குசாமி பெரிதும் உதவியதாக அவரே கூறியிருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி, தற்போது கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றை தொடங்கியுள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்த ஆசிரமத்தின் திறப்பு விழாவில் நடிகரும், சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.எம்.அன்பரசன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ், ஆகியோர் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ள லிங்குசாமி, விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment