/tamil-ie/media/media_files/uploads/2022/11/lokesh.jpg)
Lokesh Kanagaraj
வருமானவரித்துறைக்கு செலுத்தும் பணம் எங்கே செல்கிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினால் சுமையாக இல்லாமல் மகிழ்ச்சியாக வரி செலுத்தலாம் என கூறியுளள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்னும் பத்து நாட்களில் “தளபதி 67” அப்டேட் வெளியாகும் என கூறியுள்ளார்.
தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோவை வருமானவரித்துறை சார்பில் துடியலூர் பகுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் லோகேஷ்கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,
அவருக்கு விருது வழங்கி பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,நாம் செலுத்தும் வரி எங்கு செல்கிறது என தெரிந்தால் அதை சுமையாக பார்க்காமல் மகிழ்ச்சியாக செலுத்துவோம், எனவே அது குறித்து விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
வாரிசு படம் வெளியாவதை ஒட்டி “தளபதி 67” அப்டேட் ஏதும் கொடுக்காமல் இருந்தோம், தற்போது படம் வெளியாகிவிட்டது. இன்னும் 10 நாட்களில் “தளபதி 67” அப்டேட் எதிர்பார்கலாம். அதன் தொடர்ச்சியாக அப்டேட்கள் வெளியாகும். தற்போது படபிடிப்பு நடந்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Lokesh.jpg)
சினிமாவில் யார் நம்பர்.1 என்ற எழும் பேச்சுகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, சினிமாவை பொருத்தவரை அனைத்து படங்களும் ஓட வேண்டும், எல்லா ரசிகர்களும் மகிழ்சியாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து என கூறினார். தமிழ்நாட்டை “தமிழ்நாடு” என்றுஅழைப்பதையே விரும்புகிறேன்.
படம் வெளியாகும் கொண்டாட்டங்களில் ஏற்படும் இறப்புகளை தவிர்க்க வேண்டும், ரசிகர்களும் தங்கள் பொருப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும், உயிரை விடும் அளவிற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, இது பொழுகுபோக்கு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சந்தோஷமாக சென்று படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறேன்,
உயிரை கொடுக்கும் அளவிற்கு ஏதும் இல்லை, உயிரிழக்கும் அளவிற்கான கொண்டாட்டம் தேவையில்லை என்பது எனது கருத்து என தெரிவித்தார் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.