/indian-express-tamil/media/media_files/2025/10/18/ott-release-diwali-2025-10-18-19-29-48.jpg)
ஒடிடி தளங்களின் பயன்பாடு அதிகாரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், சாதாரண நாட்கள் முதல் பண்டிகை நாட்கள் வரை திரையரங்குகளில் வெளியாகும் படங்களை போல் ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திரையுலகம் ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்குத் தயாராகிவிட்டது. காதல், அதிரடி, திரில்லர் என பல வகையிலான படங்களுக்கு பஞ்சமில்லாமல் உள்ளன. திரையரங்கில் வெளியாகும் படங்களுடன், ஒடிடி தளங்களிலும் முக்கிய படங்கள் வெளியாகி உள்ளன.
திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள காதல்-அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் 'டியூட்'. சாய் அப்யங்கர் இசையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம், சிரிப்புக்கும் காதலுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அக்டோபர் 17, 2025 அன்று தீபாவளி வெளியீடாக திரையரங்கில் வெளியானது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'பைசன்' திரைப்படம், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ஒரு வலிமையான விளையாட்டு பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், ஆழமான நடிப்பு மற்றும் வலுவான செய்தியுடன், அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி முக்கிய வேடங்களில் நடித்துள்ள அதிரடி நிறைந்த தமிழ்த் திரைப்படம் 'டீசல்'. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தை, தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17, 2025 அன்று வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்க்ள வெளியாகாத நிலையில், வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் வெளியாகியுள்ளது சினிமாவில் ஆரோக்கியமான போக்கை எடுத்து காட்டுவதாக பலர் கூறி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு ஒடிடி தளத்தில் வெளியான படங்கள்
தணல்: ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் வெளியான படம் தணல். லாண்யா திரிபாதி, அஸ்வின் கோகுமானு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஒரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 17-ந் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
முதல் பக்கம்: வலுவான நடிப்பு, எதார்த்தமான கதைசொல்லல், மற்றும் ஒரு ஈர்க்கக்கூடிய உணர்ச்சிபூர்வமான மையம் ஆகியவற்றைக் கொண்டு, இந்தத் திரைப்படம் ரசிகர்களை இறுதிவரை பிணைத்து வைத்திருக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வெளியான இந்த முதல் பக்கம், அர்த்தமுள்ள சினிமாவை விரும்பும் ரசிகர்களுக்கு இது கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று. இத்திரைப்படம் அக்டோபர் 17 முதல் ஆஹா தமிழ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
டியர் ஜீவா: மனித உறவுகளின் அழகையும், அதன் மென்மையையும் உணர்வுபூர்வமாகக் கூறியுள்ள படம் டியர் ஜீவா. அன்பு, இழப்பு, மற்றும் தன்னைக் கண்டறிதல் ஆகிய வாழ்வியல் தருணங்களை இந்தத் திரைப்படம் மிகவும் யதார்த்தமாகவும், நெகிழ்ச்சியுடனும் ஆராய்கிறது. இந்த படம் அக்டோபர் 19 முதல் டென்ட்கொட்டா ஒடிடி தளத்தில் காணலாம்.
ஓஜி: தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி அதிக வசூலை குவித்த படமாக இருக்கும் ஓஜி திரைப்படம் வரும் அக்டோபர் 23-ந் தேதி முதல் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா திரைபபடமும் அடுத்து ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்க்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.