Advertisment

டான்ஸில் இவங்க அப்பவே இப்படியா? சூப்பர் ஸ்டார் பட லேட்டஸ்ட் சென்சேஷன்... 5 செகண்ட்ல யாருன்னு சொல்லுங்க!

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றும் இன்றும் என்று தனது சிறுவயது புகைப்படத்தையும், கையில் தேநீர் கப்புடன் கடல் கரையில் நடனமாடிய இன்றைய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamannah

முன்னணி நடிகை சிறுவயது புகைப்படம்

சமீப காலமாக சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படத்தை அந்த நடிகையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

இதில் அவர் 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முதல் படம் அவரது குழந்தைப் பருவத்தில் ஒரு பள்ளி விழாவில் வெள்ளி உடையில் நடனமாடுவது போல் உள்ளது. இந்த புகைப்படத்தின் மூலம் இந்த நடிகைக்கு சிறுவயது முதலே நடத்தின் மீது ஆர்வம் உள்ளது தெளிவாக தெரிகிறது. அதேபோல் சிறுவயதிலேயே மேடை ஏறி நடனமாடியுள்ளார்.

சிறு வயதிலிருந்தே நடத்தின் மீது உள்ள ஆர்வத்தினால் நடிகை பின்னாலில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வருவதற்காக அத்தியாத்தை அப்போதே தொடங்கியுள்ளார். அதன்பின்னர் தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் இதயத்தை வென்ற நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை தமன்னா தான்.

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றும் இன்றும் என்று தனது சிறுவயது புகைப்படத்தையும், கையில் தேநீர் கப்புடன் கடல் கரையில் நடனமாடிய இன்றைய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதில் "சிறுவயதில் இருந்தே எனக்குப் பிடித்தமான பாடல்களுக்கு நடனமாடுவது போல் எதுவும் என்னை மகிழ்ச்சியடையச் செய்யவில்லை என்பதை இந்த புகைப்படம் எனக்கு நினைவூட்டியது. என்ன நடந்தாலும் பரவாயில்லை' நடனமாடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2-ல் நடித்திருந்த தமன்னா தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் தமன்னாவின் சூப்பரான நடனத்தில் வெளியான காவாலா பாடல் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment