scorecardresearch

தி.மு.க அமைச்சர் குடும்பத்தின் சம்பந்தி ஆகிறார், மதுரை அன்பு செழியன்!

Tami Cinema Update : அன்புச்செழியன் மகள் சுஷ்மிதாவுக்கும், சென்னையில் பிரபல சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் சரணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க அமைச்சர் குடும்பத்தின் சம்பந்தி ஆகிறார், மதுரை அன்பு செழியன்!

Tamil Entertainment News Update : பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகளுக்கும், சென்னையில் பிரபல சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநரான சரண் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர், தியேட்டர் உரிமையாளர் என பல துறைகளில் பிரபலமானவர் ஜி.என.அன்புச்செழியன். இவரது மகள் சுஷ்மிதா. கோபுரம் சினிமாஸின் உரிமையாளராக இவர் சமீபத்தில் மதுரையில், 3 ஸ்கிரீன்களுடன் கூடிய மல்டிபிளக்ஸ் திரையரங்கை திறந்து வைத்தார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில இளங்களை பட்டம் பெற்ற இவர், எம்பிஏ முடிதுள்ளார்.மேலும் இளம் வயதில் சுமார் 50 திரையரங்குகளை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், அன்புச்செழியன் மகள் சுஷ்மிதாவுக்கும், சென்னையில் பிரபல சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன் ஐஏஎஸ் அவர்களின் மகனும் சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநருமான சரணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சென்னயைில் உள்ள முன்னணி ஐஏஎஸ் அகாடமியான சன் நிறுவனத்தை நிர்வகித்து வரும் சரண், பி.டெக் எம்பிஏ முடித்துள்ளார்.

இவர்க் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில். வரும் பிப்ரவரி 21-ந் தேதி சென்னை திருவாண்மையூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது. காலையில் திருமணமும் மாலையில் வரவேற்பும் நடைபெறவுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அரசு உயர் அதிகாரிகள் பலர் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பிரபலமாக முன்னணி ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனாகளின் ஒருவரான ராஜேந்திரன் ஐஏஎஸ், தமிழகத்தின் பிரபல தொழில்துறை  அமைச்சரான தங்கம் தென்னரசுவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema financer anbuchezhiyan daughter weddingupdate