இப்போ வெளிநாடு ஷூட்டிங் சர்வ சாதாரணம்; ஆனா பல நாடுகளில் ஷூட்டிங் நடந்த முதல் தமிழ் படம் எது தெரியுமா?

சமீபத்தில் வெளியான ரஜினியின் கபாலி, அஜித்தின் விடா முயற்சி, தனுஷின் ஜகமே தந்திரம் என பல படங்களை சொல்லலாம். ஆனால் இந்த வரிசையில் முதலில் இடம்பெற்ற படம் எது தெரியுமா? 

சமீபத்தில் வெளியான ரஜினியின் கபாலி, அஜித்தின் விடா முயற்சி, தனுஷின் ஜகமே தந்திரம் என பல படங்களை சொல்லலாம். ஆனால் இந்த வரிசையில் முதலில் இடம்பெற்ற படம் எது தெரியுமா? 

author-image
D. Elayaraja
New Update
Vaali MGR Kannadasan

சினிமாவில் இப்போது சர்வ சாதாரணமாக வெளிநாடுகளில் படமாக்கும் நடைமுறை வந்துவிட்டது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இப்போது பெரும்பாலான இயக்குனர்கள் தங்கள் கதைக்களத்தையே முழுவதுமாக வெளிநாட்டில் நடப்பது போல் உருவாக்கி வருகின்றனர். சமீபத்தில் வெளியான ரஜினியின் கபாலி, அஜித்தின் விடா முயற்சி, தனுஷின் ஜகமே தந்திரம் என பல படங்களை சொல்லலாம். ஆனால் இந்த வரிசையில் முதலில் இடம்பெற்ற படம் எது தெரியுமா? 

Advertisment

தமிழ் சினிமாவில் முதன் முதலில் முழுவதுமாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படம் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1973-ம் ஆண்டு வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தான். திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர், முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா இறந்தவுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பிறகு 1972-ம் ஆண்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

கட்சி தொடங்கினாலும், சினிமாவில் தனது இருப்பை வைத்திருந்த எம்.ஜி.ஆர், 1973-ம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். முதன் முதலில் இந்தியாவில் இல்லாமல் வெளிநாடுகளில் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஜப்பான் போன்ற நாடுகளில் பயணிப்பது போல் அமைக்கப்பட்ட இந்த படத்தின் கதை, பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது, எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அவருடன் லதா நாயகியாக நடித்திருந்தார். 

மேலும், அசோகன், நம்பியார், நாகேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன், மஞ்சுளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவிஞர் வாலி, கண்ணதாசன், புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தின் பாடல்கள் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் நினைவு தினம், பிறந்த தினம், அதிமுக விழா என எதுவாக இருந்தாலும் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்கள் ஒலிக்காமல் இருக்காது என்ற நிலை இன்றும் இருக்கிறது 

Advertisment
Advertisements

இந்த படத்தின் பணிகள் தொடங்கும்போது ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தினர் படப்பிடிப்புக்கு தடையாக இருப்பார்கள் என்பதால், படத்தின் படப்படிப்பை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கிய எம்.ஜி.ஆர், படத்தை வெளியிட தடைகள் வரும் என்பதை தெரிந்துகொண்டு, படத்தின் இறுதிக்கட்ட பணிகளை ரகசியமாக செய்து, இந்த படம் வெளியானால் சேலைக்கட்டிக்கொள்கிறேன் என்று சொன்ன, தி.மு.க பிரபலம் ஒருவரின் சொந்த ஊரான மதுரையிலேயே முதல் காட்சியை திரையிட்டுள்ளார். 

பெரிய ரிஸ்க் எடுத்து இந்த படத்தை வெளியிட்ட எம்.ஜி.ஆருக்கு இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், 52 வருடங்கள் ஆனாலும் இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது.

tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: