scorecardresearch

மதம் மாறிய வில்லன் நடிகர்… ஜி.வி.பிரகாஷின புதிய படம்… டாப் 5 சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம், மற்றும் விவேக் என்பரின் இயக்கத்தில் 13 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மதம் மாறிய வில்லன் நடிகர்… ஜி.வி.பிரகாஷின புதிய படம்… டாப் 5 சினிமா செய்திகள்

கோல்டன் விசா பெற்ற யுவன் சங்கர் ராஜா

அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ள நிலையில், தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷின புதிய படம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் என பயணித்து வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம், மற்றும் விவேக் என்பரின் இயக்கத்தில் 13 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். நாளை சக்கரவியூகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய உதய் மகேஷ் இயக்கும் இந்த படத்தில், ஜி.பி.பிரகாஷ் ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளார்.

தெலுங்கில் அறிமுகமாகும் யோகி பாபு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ஒரு தெலுங்கு நடிக்க யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் யோகி பாபு தெலுங்கில் அறிமுகமாகிறார்.

மதம் மாறிய வில்லன் நடிகர்

தமிழ் சினிமாவில் விருமாண்டி தொடங்கி பல படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர் சாய் தீனா. விஜயின் தெறி, பிகில், மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனது குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

களவாணி பட இயக்குனருடன் மீண்டும் வாரிசு நடிகர்

களவாணி, வாகை சூடவா போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் சற்குணம் ஏற்கனவே அதர்வா நடிப்பில் சண்டிவீரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இதனிடையே தற்போது மீண்டும் அதர்வா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். பட்டத்து அரசன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், முக்கிய கேரக்டரில் ராஜ்கிரன் நடித்து வருகிறார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema gv prakash new movie and villain actor converted religion