Advertisment

தனுஷின் மெகாஹிட் பட நடிகை... இவரை யார்னு தெரியுதா?

தெலுங்கில் அறிமுகமாகி தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் தற்போது டாப்சி பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

author-image
WebDesk
New Update
Taapsee

நடிகை டாப்சி

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்சி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

ஜோகுமண்டி நாதம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை டாப்சி பன்னு தொடர்ந்து 2011-ம் ஆண்டு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் நடித்திருந்தார்.

publive-image

இந்த படம் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியதை தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதியுடன் அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

மேலும் கடந்த ஆண்டு வெளியான ஷபாஸ் மித்து என்ற படத்தில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் கேரக்டரில் நடித்திருந்தார்.அதேபோல் டாப்சி அமிதாப் பச்சனுடன் நடித்த பிங்க் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

publive-image

இந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. வக்கீல் சாப் என்ற பெயரில் இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் ஆனது.

publive-image

தெலுங்கில் அறிமுகமாகி தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் தற்போது டாப்சி பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். டன்கி உள்ளிட்ட சில படங்கள் நடித்து வருகிறார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் டாப்சி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில வித்தியாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment