Advertisment

முதல் நாளே 2500 ஷோ: கர்நாடகாவில் ஜெயிலர் மேனியா

கர்நாடகா முழுவதும் உள்ள சிங்கிள் தியேட்டர்களில் 5 முதல் 6 காட்சிகள் காலை 6 மணிக்குத் தொடங்கும். மறுபுறம், மல்டிபிளெக்ஸ்கள் குறைந்தபட்சம் 15 முதல் 20 காட்கள் திரையிட ஏற்பாடு செய்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Hukum

ஜெயிலர்

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், ஒரு ஆப்’பில் சுமார் 6 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்னர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாணமாக தயாரித்துள்ள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) வெளியாக உள்ளது.

இந்நிலையில், கர்நாடகளாவில் ஜெயண்ணா ஃபிலிம்ஸ் மூலம் ரிலீஸ் செய்யப்படும் ஜெயிலர் படம் மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு சுமார் 300 சிங்கிள் ஸ்கிரீன்களிலும், மல்டிபிளக்ஸ்கள் இரண்டிலும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகா முழுவதும் உள்ள சிங்கிள் தியேட்டர்களில் 5 முதல் 6 காட்சிகள் காலை 6 மணிக்குத் தொடங்கும்.

மறுபுறம், மல்டிபிளெக்ஸ்கள் குறைந்தபட்சம் 15 முதல் 20 காட்கள் திரையிட ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் ஜெயிலர் படம்  முதல் நாளில் மொத்தமாக 2500 காட்சிகளைத் தாண்டியுள்ளது. "கர்நாடகாவில் ஜெயிலர் படத்திற்கு கிடைக்கும் இந்த வரவேற்பு ரஜினிகாந்தின் புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒரு புதிய உச்சத்தைக் குறிக்கிறது," என்று ஜெயன்னா பிலிம்ஸ் கூறியுள்ளனர். மேலும் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பது கூடுதல் பலம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment