Advertisment

டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகளா இவர்! ஜெயிலர் நடிகை வைரல் க்ளிக்ஸ்

ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ள ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் அவரது மருமகளாக நடித்துள்ளார் மிர்னா மேனன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mirna Monen

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் அவரது மருமகளாக நடித்துள்ள நடிகை மிர்னா மேனன் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

கேரளா மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் மிர்னா மேனன். மோகன்லால் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான பிக் பிரதர் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

publive-image

அதனைத் தொடர்ந்து கிரேஸி ஃபெல்லோ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான மிர்னா மேனன், சமீபத்தில் வெளியான புர்கா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

publive-image

இதனிடையே வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ள ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் அவரது மருமகளாக நடித்துள்ளார் மிர்னா மேனன்.

publive-image

நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ள நிலையில், அவர்களுடன் மிர்னா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

publive-image

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் ரசிகர்க்ள மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஆக்ஷன் காட்சி ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் மிர்னா இருவரும் கொடுக்கும் ரியாக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

ஜெயிலர் படத்தை தொடர்ந்து பிரித்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்னா மேனன் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வரும் நிலையில், நம்ம ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகளா இவர் என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment