Advertisment

தமன்னா டான்ஸ் தாறுமாறு... ட்ரோல் இங்க செமஜோறு... காவாலா பாட்டுக்கு வந்த சோதனை

பாடலுக்கு தமன்னா தாறுமாறாக நடனமாடியுள்ளார். அவரின் டான்ஸ் மூவ்மெண்ட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

author-image
WebDesk
New Update
Tamannah

ஜெயிலர் காவாலா பாடல் தமன்னா

ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று வெளியான படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனாலும் இந்த பாடல், கிருபை கிருபை பாடல் காப்பி என்று கூறி பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயலிர் படத்தில் நடித்து வருகிறார். தமன்னா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில் வெளியான காவாலா என்ற இந்த பாடல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

சமீபத்தில் வெளியான ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட ஒடிடி படங்களின் மூலம் உச்சத்தில் இருக்கும் தமன்னா ஜெயிலர் படத்தில் எப்படி நடித்துள்ளார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்த நிலையில், இதற்கு டிரெய்லர் காட்டும் விதமாக ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா தற்போது வெளியாகி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த பாடலுக்கு தமன்னா தாறுமாறாக நடனமாடியுள்ளார். அவரின் டான்ஸ் மூவ்மெண்ட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர். இது ஒரு பக்கம் வைரலாகி வந்தாலும் மறுபக்கம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் டெம்பிளேட் மீம்ஸை போட்டு காவாலா ப்ரமோ, காவாலா ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்குன்னு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதேபோல் காமெடி நடிகர் செந்தில் காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது போன்ற எடிட் வீடியோ தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், ஆர்யாவின் தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா, ரஜினிகாந்தின் தீ பட பாடல்கள் என அனைத்தையும் காவாலா பாடலை மிக்ஸ் செய்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரம் ரஜினிகாந்த் மற்றும் தமன்னாவை வைத்து ஏகப்பட்ட மோசமான ட்ரோல்களை விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வர, இரு தரப்புக்கும் சோஷியல் மீடியா பெரும் மோதல் வெடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamanna Bhatia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment