Advertisment

கட்டிங் வேண்டாம்...'ஜாக்கிரதையா இருக்கணும்' : ரோபோ சங்கருக்கு கமல்ஹாசன் அறிவுரை

ரோபோ சங்கருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன், ரோபோ சங்கருக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Haasan Robo

கமல்ஹாசன் - ரோபா சங்கர்

சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்த நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ரோபோ சங்கருக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார்.

Advertisment

சின்னத்திரையில் காமெடி ஷோக்கள் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். தனக்கென சின்னத்திரையில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்ட ரோபோ சங்கர், விஸ்வாசம், மாரி, புலி, வேலைக்காரன், ஹீரோ உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார்.

இதனிடையே சமீப காலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என எதிலுமே தலை காட்டாமல் இருந்த ரோபோ சங்கர், திடீரென உடல் மெலிந்து இருப்பது போன்ற வீடியோ பதிவு ஒன்று வெளியானர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோபோ சங்கரா இது அவருக்கு என்ன ஆச்சு என்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளித்த ரோபோ சங்கர், சினிமாவுக்காத்தான் உடல் எடையை குறைத்ததாகவும், இடையில் மஞ்சள் காமாலை நோய் தாக்குதல் இருந்ததால் இவ்வாறு ஆகிவிட்டதாக வெளிப்படையாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து ரோபோ சங்கருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறிய நிலையில், அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

அதன்படி தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வரும் ரோபோ சங்கர், படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன், ரோபோ சங்கருக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார். இந்த உரையாடலின்போது தனது மகளுக்கு விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும், உங்களிடம் கேட்டுவிட்டுதான் திருமண தேதி முடிவு செய்வேன் என்றும் ரோபோ சங்கர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த உரையாடலின்போது கமல்ஹாசன் மிகவும் அக்கறையுடன் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள், கட்டிங் எல்லாம் இனிமேல் வேண்டாம், 'ஜாக்கிரதையா இருக்கணும்' என்றும் அறிவுரை கூறியுள்ளார். கமல்ஹாசன் தற்போது ரோபோ சங்கரிடம் நலம் விசாரித்தது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment