பொதுவாக ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் நடிக்க வந்து அவர் பிரபலமாகிவிட்டால், அவர்கள் வீட்டில் இருந்து மேலும் சிலர் நடிகர்களாக வந்துவிடுகிறார்கள். அந்த வகையில், சிவாஜி கணேசன் மகன் பிரபு, கமல் மகள் ஸ்ருதிஹாசன், கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக், சிவாஜி கணேசன் பேரன் விக்ரம் பிரபு என இந்த பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல் நக்மாவின் சகோதரி ஜோதிகா, சிம்ரனின் தங்கை மோனல், என நடிகைகளின் பட்டியலும் நீளம் தான்.
இந்த மாதிரி அப்பா மகன், அக்கா தங்கை சினிமாவில் இருந்தாலும், இவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் நடிக்கும்போது கதைக்கு ஏற்படி கேரக்டரை தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில், உண்மையாக கார்த்தியின் அண்ணியாக இருக்கும் நடிகை ஜோதிகா, தம்பி படத்திக் கார்த்தியின் அக்காவாக நடித்திருந்தார். இந்த வரிசையில், ஒரு நடிகை தனது உடன்பிறந்த சகோதரிக்கு அம்மா கேரக்டரில் ஒரு படத்தில் நடித்துள்ளார். அது என்ன படம் என்பதை பார்ப்போமா?
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து முத்திரை பதித்தவர் தான் நடிகர் நாசர். இவர் ஒரு சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அவதாரம் திரைப்படமும் அதில் இடம் பெற்ற தென்றல் வந்து தீண்டும்போது என்ற பாடலும் இன்று வரை 90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரெட் பாடல்களில் ஒன்றாக நிலைத்திருக்கிறது. இதுவரை 5 படங்களை இயக்கியுள்ள நடிகர் நாசர், 4-வது படமாக பாப் கார்ன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் மோகன்லால் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் சிம்ரன், ஜோதி நேவல், ஊர்வசி, விவேக், ஸ்ரீமன், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை எழுதிய நாசர் படத்தை இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தை, நாசரின் மனைவி கமீலா நாசர் தயாரித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/25/rfOqf4FpaWpuknuxZBVv.jpg)
பிரபல இசையமைப்பாரராக இருக்கும் விக்ரமாதித்யன் (மோகன்லால்) நடன கலைஞர் ஜமுனாவை (சிம்ரன்) காதலித்து திருமணம் செய்துகொள்வார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்படும் கலை ஈகோ காரணமாக பிரிந்துவிடுகின்றனர். தனது தாய் சிம்ரனுடன் இருக்கும், மகள் மேகா (ஜோதி நேவல்) அப்பா – அம்மா இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் மீதிக்கதை. பிரபலங்களின் திருமண வாழ்க்கையில் ஈகோ எப்படி வருகிறது என்பதை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மோகன்லால் சிம்ரன் ஜோடிக்கு மகளாக நடித்தவர் ஜோதி நேவல். இவர் உண்மையில் நடிகை சிம்ரனின் தங்கை. சிம்ரனுக்கு 2 தங்கைகள் இருந்தனர் பார்வை ஒன்றே போதுமே என்ற படத்தில் நடித்திருந்த நடிகை மோனல் நேவல் சிம்ரனின் மூத்த சகோதரி, ஜோதி நேவல் அவரின் 2-வது சகோதரி ஆவார். தனது வாழ்க்கையில் உடன்பிறந்த சகோதரிக்கு திரைப்படத்தில் தாயாக நடித்துள்ளார் நடிகை சிம்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.